டாஸ் வென்ற பஞ்சாப் அணி: பேட்டிங் செய்யும் கொல்கத்தா

சனி, 12 மே 2018 (15:42 IST)
ஹால்கர் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறும் பஞ்சாப் அணிக்கெதிராக கொல்கத்தா அணி பேட்டிங் செய்யவுள்ளது.  

 
 
ஐபிஎல் கிரிக்கெட் போட்டி தொடரில் இன்று பஞ்சாப் மற்றும் கொல்கத்தா அணிகள் மோதவுள்ளன. சற்றுமுன் டாஸ் போடப்பட்ட நிலையில் பஞ்சாப் அணி கேப்டன் அஸ்வின் டாஸ் வென்று பந்துவீச முடிவு செய்தார். இதனால் கொல்கத்தா அணி இன்னும் சற்று நேரத்தில் பேட்டிங் செய்யவுள்ளது.
 
இந்த போட்டியில் வெற்றி பெற்றால் மட்டுமே பிளேஆப் சுற்றுக்கு வரிசையில் நீடிக்க முடியும் என்ற நிலையில் கொல்கத்தா அணி களமிறங்க உள்ளது.
 
இரு அணிகளும் இதற்கு முன் மோதிய போட்டியில் பஞ்சாப் அணி 9 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது குறிப்பிடத்தக்கது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்