சிஎஸ்கே தோல்விக்கான காரணம்தான் என்ன?
பேட்டிங் வரிசையில் மாற்றத்தால் அதிரடியாக ஸ்கோர் செய்யும் வாய்ப்பு கெட்டது. நடந்து முடிந்த கடந்த இரு போட்டிகளிலும் அம்பாட்டி ராயுடு, வாட்ஸன் இருவரும் நல்ல துவக்கத்தை கொடுத்தனர்.
ஆனால், இந்த போட்டியில், வாட்ஸனையும் முரளி விஜய்யையும் துவக்க வீரர்களாக களமிறக்கி தோனி தவறு செய்துவிட்டார். முரளிவிஜய், வாட்ஸன் இருவரும் அவசரப்பட்டு ஆட்டமிழந்தனர்.
பில்லிங்ஸும் ஒன்றை இலக்க ரன்னோடு வெளியேறியது சிஎஸ்கே தலைமைக்கு மேலும் நெருக்கடியை ஏற்படுத்தியது. ராயுடு சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். அவரது விக்கெட் வீழ்ந்த பின்னர் பிரவோ வருவார் என எதிர்ப்பார்த்த நிலையில், ஜடேஜா களம் இறங்கியது அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
அதன் பின்னர் அதிரடியை துவங்கினார் தோனி, 18வது ஓவரில் ஜடேஜா ஆட்டமிழக்க, கடைசி ஓவரை தோனியும், பிராவோவும் சந்தித்தனர். ஆனால், கடைசி ஓவரில் இவர்களது கூட்டணி பலனளிக்கவில்லை. 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட்களுக்கு 193 ரன்கள் மட்டுமே சென்னை அணி சேர்த்தது. சென்னை அணி செய்த சிறு தவறுகளால் நேர்ந்த தேவையில்லாத தோல்வி இது.