குஜராத் லயன்ஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்டுகள் இழப்புக்கு 135 ரன்கள் எடுத்தது. இதையடுத்து 136 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கோடு களமிறங்கிய நடப்பு சாம்பியன் சன்ரைசர்ஸ் அணி 9 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. கேப்டன் டேவிட் வார்னர் 45 பந்துகளுக்கு 76 ரன்கள் எடுத்து அசத்தினார்.