ஐபிஎல் தொடர்: டிவிட்டரில் தல தளபதி மோதல்!!

வியாழன், 20 ஏப்ரல் 2017 (11:47 IST)
இந்தியாவில் நடக்கும் உள்ளூர் டி-20 கிரிக்கெட் தொடரான ஐபிஎல் தொடர், 10 வது ஆண்டாக வெற்றிகரமாக நடந்து வருகிறது. இதில் எல்லா அணிகளும் 5 போட்டிகளில் விளையாடிவிட்டது. 


 
 
ஐபிஎல் போட்டிகள் துவங்கி இரண்டு வாரங்கள் முடிந்த நிலையில், டுவிட்டரில் அதிகமாக பயன்படுத்தப்பட்ட வீரர்களில் பெயர்கள் தற்போது வெளியாகியுள்ளது.
 
இதில் புனே வீரர் தோனி முதலிடம் பிடித்துள்ளார். இவரை தொடர்ந்து பெங்களூரு அணி கேப்டன் விராட் கோலி இரண்டாவது இடத்தில் உள்ளார். 
 
இவர்களை தொடர்ந்து டிவிலியர்ஸ் (பெங்களூரு), காம்பிர் (கொல்கத்தா), யுவராஜ் (ஐதராபாத்), ரோகித் சர்மா (மும்பை), ஸ்டீவ் ஸ்மித் (புனே), ரெய்னா (குஜராத்), வார்னர் (ஐதராபாத்), புவனேஷ்வர் குமார் (ஐதராபாத்) ஆகியோர் உள்ளனர்.
 
இந்த பட்டியல் டுவிட்டரில் ஐபிஎல் தொடருக்காக உருவாக்கப்பட்ட ஹேஸ்டாக் இமோஜிக்களின் பயன்பாட்டின் அடிப்படையில் கணக்கிடப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

வெப்துனியாவைப் படிக்கவும்