இதையடுத்து களமிறங்கிய பஞ்சாப் அணி தொடக்கம் முதலே அதிரடியாக ஆடி வந்தது. ஆம்லா 60 பந்துகளில் 6 சிக்ஸர், 8 பவுண்டரிகளுடன் 104 ரன்கள் குவித்தார். இந்த ஐபிஎல் சீசனில் இது அவரது இரண்டாவது சதமாகும். 20 ஓவர் முடிவில் பஞ்சாப் அணி 4 விக்கெட் இழப்பிற்கு 198 ரன்கள் குவித்தது.