டெஸ்ட் தோல்விகளும் - தோனியின் சாக்குப்போக்குகளும் - ஒரு பார்வை!
வியாழன், 20 பிப்ரவரி 2014 (12:49 IST)
அதிக டெஸ்ட் போட்டிகளை வென்ற இந்திய கேப்டனும் தோனியே, அதே வெளையில் அதிக அயல்நாட்டுப்போட்டிகளில் தோற்ற கேப்டனும் தோனியே. ஆனால் ஒவ்வொரு தோல்வியின் போதும் அவர் சாக்குபோக்குகள் சொல்வது வழக்கம், அது ஒவ்வொன்றையும் பார்த்தால் இப்போது எப்படியிருக்கும்: அத்தகைய முயற்சியே இது!
FILE
எக்ஸ்கியூஸ் நம்பர் 1: 2011, லார்ட்ஸ் தோல்வி:
முதல் டெஸ்டிலேயே 196 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி! தோனியின் கூற்று: ஜாகீர் கான் முதல் நாளில் காயமடைந்து வெளியேறியது பெரிய பின்னடைவு. ஸ்பின்னர்களுக்கு பிட்சில் முதல் 2 நாட்கள் எந்த வித உதவியும் இல்லை.
எக்ஸ்கியூஸ் நம்பர் 2; நாட்டிங்கம் டெஸ்ட் தோல்வி:
319 ரன்கள் எடுத்து வெற்றி பெற முடியாதது என்று எதுவும் இல்லை. ஆனால் இந்தியா எந்த வித சவாலும் இன்றி 158 ரன்களுக்கு சுருண்டது; இது குறித்து தோனி:
FILE
"நம் பவுலர்கள் களைப்படைந்து விட்டனர். ஆனால் இங்க்லாந்து வீரர்கள் சில அபாரமான ஷாட்களை ஆடினர் என்பதையும் நாம் ஒப்புக் கொள்ளவேண்டும்"
எக்ஸ்கியூஸ் நம்பர் 3:
பர்மிங்ஹாம் டெஸ்டில் இந்தியா இன்னின்ஸ் மற்றும் 242 ரன்களில் படுதோல்வி அடைந்தது, மெக்கல்லம் போல் குக் 294 ரன்கள் எடுத்தார். எக்ஸ்ட்ராஸ் வகையில் இந்தியா 63 ரன்கள் கொடுத்தது:
"சில தோல்விகள் எதையும் மாற்றிவிடாது. நான் எனது அணி குறித்து இன்னும் பெருமையாகவே கருதுகிறேன், ஒவ்வொரு போட்டியையும் வெல்ல வேண்டும் என்று மக்கள் எதிர்பார்க்கிறார்கள், இது நடைமுறையில் சாத்தியமில்லை.
எக்ஸ்கியூஸ் நம்பர் 4:
ஓவலிலும் தோல்வி! தோனி: நாங்கள் இந்தத் தொடரில் எங்களது சிறப்பானவற்றை பங்களித்தோம், அதுதாந்ன் முக்கியம்.
இங்கிலாந்து முடிந்ததா அப்படியே ஆஸ்ட்ரேலியா செல்வோம்!
எக்ஸ்கியூஸ் நம்பர் 5:
மெல்பர்னில் 292 ரன்கள் எடுத்தால் வெற்றி! இந்தியா 169 ரன்களுக்குச் சுருண்டது. இதோ தோனி:நாங்கள் எப்பவும் மந்தமாகத்தான் துவங்குவோம், அடுத்த டெஸ்டில் முன்னேற்றம் இருக்கும் என்று நினைக்கிறேன்.
FILE
எக்ஸ்கியூஸ் நம்பர் 6 : சிட்னியில் இன்னிங்ஸ் தோல்வி! இதோ தோனி: இது கடின காலம், இதுபோன்ற தோல்விகள் நம்மை பலமாக மாற்றுகிறது
எக்ஸ்கியூஸ் நம்பர் 7 :
FILE
அடிலெய்ட் டெஸ்ட் தோல்வி: தோனி பிரஸ் மீட்டைத் தவிர்த்து சேவாகை அனுப்பினார்.
எக்ஸ்கியூஸ் நம்பர் 8:
டர்பன் டெஸ்டில் தோல்வி: "அனுபவத்திலிருந்து வீரர்கள் பாடம் கற்றுக் கொள்வர், காலப்போக்கில் பவுலர்கள் களைப்படைந்த தருணத்தில் ஸ்கோர் செய்வது எப்படி என்பதை கற்றுக் கொள்வார்கள்"
எக்ஸ்கியூஸ் நம்பர் 9:
நியூசீலாந்தில் தோல்வி: பவுலர்களை பாராட்டுகிறேன், எல்லா பீல்ட் செட் அப்பும் செய்து பார்த்தேன், ஒரு விசிறியாக மெக்கல்லம் பேட்டிங் அபாரம். இந்தியாவின் ஆட்டம் படிபடியாக முன்னேறியிருக்கிறது.
இங்கிலாந்துக்கு எதிராக இந்தியாவில் டெஸ்ட் தொடரை 2- 0 என்று இழந்த பிறகு:
டாஸ் ஒரு முக்கியமான விஷயம். முதல் நாளிலிருந்தே ஸ்பின் ஆகும் பிட்ச் கேட்டேன். ஆனால் அவ்வாறு இல்லை.