டிவிலியர்ஸின் உலக சாதனை! புள்ளி விவரங்கள்!

வெள்ளி, 21 பிப்ரவரி 2014 (13:46 IST)
ஆஸ்ட்ரேலியாவுக்கு எதிராக தென் ஆப்பிரிக்கா தனது 2வது டெஸ்ட் போட்டியை நேற்று துவங்கியது. முதல் நாள் ஆட்டத்தில் தென் ஆப்பிரிக்கா 5 விக்கெட்டுகள் இழப்பிற்கு 214 ரன்கள் எடுத்துள்ளது. மீண்டும் டிவிலியர்ஸ் 51 நாட் அவுட். இதில் சில சாதனைகளை அவர் நிகழ்த்தியுள்ளார்.
FILE

தொடர்ந்து 12வது முறையாக டெஸ்ட் போட்டிகளில் 50 அல்லது அதற்கு மேற்பட்ட ரன்களை எடுத்து உலக சாதனை புரிந்துள்ளார் டிவிலியர்ஸ். இதற்கு முன்பு 11 டெஸ்ட்களில் தொடர்ந்து அரைசதம் அடித்தவர்கள்: விவ் ரிச்சர்ட்ஸ், கம்பீர், விரேந்தர் சேவாக்.

டெஸ்ட் கிரிக்கெட்டில் டிவிலியர்ஸ் 7000 ரன்களை கடந்தார். தன் 151வது இன்னிங்ஸில் அவர் 7000 டெஸ்ட் ரன்களைக் கடந்தார். ஸ்மித் 148 இன்னிங்ஸ்களில் 7000 ரன்களை கடந்ததே தென் ஆப்பிரிக்க சாதனையாகும். சேவாக் 134 இன்னிங்ஸ்களிலும், சச்சின் டெண்டுல்கர் 136 இன்னிங்ஸ்களிலும் 7000 ரன்களைக் கடந்தனர். முதலிடம் வகிப்பவர் இங்கிலாந்தின் ஹேமாண்ட் இவர் 131 இன்னிங்ஸ்களில் கடந்தார். சோபர்ஸ் 138 இன்னிங்ஸ்களில் கடந்தார்.
FILE

முதல் நாள் ஆட்டம்: ஜான்சனை மடக்க மட்டை பிட்ச்!

இன்னிங்ஸ் துவக்கத்தில் ஸ்மித் மீண்டும் ஒரு மோசமான ஆட்டத்துடன் பெவிலியன் திரும்பினார் இந்த முறை அவரை ரயான் ஹேரிஸ் காலி செய்தார்.

ஹஷிம் ஆம்லா மீண்டும் ஜான்சனின் அதிவேக இன்ஸ்விங்கருக்கு எல்.பி.ஆனார். ஆஷஸ் புத்துயிருப்பிற்குப் பிறகு அவரது 50வது விக்கெட்டாகும் இது.

ஜான்சனுக்கு பந்துகள் எழும்பினாலும் ஸ்லோவாக எழும்புமாறு பிட்ச் அமைக்கப்பட்டது. டுபிளேசி 55 ரன்கள் எடுத்தார். டீன் எல்கர் 83 ரன்கள் எடுத்தார். கடைசியில் லூஸ் ஷாட்களினால் விக்கெட்டுகள் விழுந்தது.

வெப்துனியாவைப் படிக்கவும்