கிறிஸ் கெய்லின் மிகப்பெரிய சிக்ஸ்! துறைமுகத்தில் போய் விழுந்தது!
புதன், 12 மார்ச் 2014 (15:57 IST)
பார்பேடோஸில் நேற்று இங்கிலாந்துக்கு எதிரான 2வது T20 சர்வதேச போட்டியில் அதிரடி சூரப்புலி கிறிஸ் கெய்ல் அடித்த சிக்சர் ஒன்று மைதானத்திற்கு வெளியே சென்று துறைமுகம் அருகே போய் விழுந்தது.
இது கெய்ல் அடித்த மிகப்பெரிய சிக்சர் என்று கருதப்படுகிறது. நியூசீலாந்தில் இதற்கு முன் இவர் அடித்த சிக்சர் ஒன்று சுமார் 123 மீ தூரம் சென்று மைதானத்திற்கு வெளியே போய் விழுந்தது நினைவிருக்கலாம். அது நினைவில்லையெனில் இதோ வீடியோ:
)
நன்றி : யுடியூப்
நேற்று இங்கிலாந்து முதலில் பேட் செய்து 7 விக்கெட்டுகள் இழப்பிற்கு 152 ரன்கள் எடுத்தது.
சன்டோகி என்ற பவுலர் 4 விக்கெட்டுகளை அறிமுகப் போட்டியிலேயே வீழ்த்தினார். தொடர்ந்து ஆடிய மேற்கிந்திய அணி 4.3 ஓவர்களில் 48 ரன்கள் என்று துவங்கியது, காரணம் கெய்ல் 30 பந்துகளில் 36 1 பவுண்டரி 4 சிக்சர்கள். இதில் ஒருசிக்சர்தான் துறைமுகத்தில் போய் விழுந்தது. டிவைன் ஸ்மித் 30 எடுத்தார்.
கடைசியில் 23 பந்துகளில் 36 ரன்கள் தேவை என்ற நிலை இருந்தது. அப்போது கேப்டன் டேரன் சமி இறங்கி 9 பந்துகளில் 2பவுண்டரி 3 சிக்சர்கள் என்று ஒரு ஷாகித் அப்ரீடி இன்னிங்ஸ் ஆட வெஸ்ட் இண்டீச் 7 பந்துகள் மீதம் வைத்து 155/5 என்று வெற்றி பெற்று 3 போட்டிகள் கொண்ட தொடரில் 2- 0 என்று தொடரை கைப்பற்றியது.
FILE
முதலில் டேர்ன்பாக் வீசிய ஷாட் பிட்ச் பந்தை நகர்ந்து கொண்டு டீப் மிட்விக்கெட்டில் ஒரே இழுப்பு இழுத்தார் பந்து மைதானத்தின் மேற்கூரையில் பட்டு வெளியே சென்றது.
என்னதான் அடித்தாலும், கோட்டுக்கு சற்று வெளியே அடித்தாலும் சிக்சர்தான் மைதானத்திற்கு வெளியே அடித்தாலும் சிக்சர்தான். ஆனால் கெய்ல் எப்போதும் மைதானத்தை விட்டு பந்தை அனுப்புவதில் கில்லாடி. ஏற்கனவே ஒன்றை அனுப்பிய நிலையில் இங்கிலாந்தின் ஆஃப் ஸ்பின்னர் டிரெட்வெல் வந்தார். சற்றே நடந்து வந்து ஒரே தூக்குத் தூக்கினார் பந்து இறங்கவேயில்லை கூரையும் தாண்டிச் சென்றது. அருகில் உள்ள துறைமுகத்திற்கு அது சென்றிருக்கக்கூடும்.
வர்ணனையிலிருந்தவர்கள் ஜொயெல் கார்னர் ஒருமுறை பெட்ரோல் நிலையத்திற்கு அடித்த சிக்சரை விட இது பெரியது என்றே கூறினர்.