பலகார வகைகளில் காராபூந்தி செய்ய...!

தேவையான பொருட்கள்:
 
பச்சரிசி மாவு - 1 கப், 
கடலைமாவு - 4 கப், 
மிளகாய்த்தூள் - 2 டீஸ்பூன், 
வெங்காயம் - தேவைப்படும் அளவு 
சமையல்சோடா - 1 சிட்டிகை, 
உப்பு, எண்ணெய், கறிவேப்பிலை - தேவைக்கு ஏற்ப 
வேர்க்கடலை, முந்திரிப்பருப்பு - தலா 50 கிராம்.

 
செய்முறை:
 
சிறிது எண்ணெயில் வேர்க்கடலை, முந்திரி, கறிவேப்பிலையை தனித்தனியாக வறுத்து வைக்கவும்.

அரிசிமாவு, கடலைமாவு,  மிளகாய்த்தூள், வெங்காயம், சமையல்சோடா, உப்பு அனைத்தையும் கலந்து முறுக்கு மாவு பதத்திற்கு பிசையவும். கடாயில் எண்ணெயை காயவைத்து பூந்தி கரண்டியில் மாவை வைத்து தேய்க்கவும். 
 
பூந்தி பொரிந்து மேலே கரகரப்பாக வந்ததும் வடித்தெடுத்து அதில் மிளகாய்த்தூள், முந்திரி, வேர்க்கடலை, கறிவேப்பிலை பொரித்த கலவையில் கலந்து ஆறியதும் டப்பாவில் போட்டு வைக்கவும். தீபாவளிக்கு காரசாரமான ஒரு காராபூந்தி தயார்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்