சுக்கான் கீரையின் வேரை நிழலில் உலர்த்தி, பொடி செய்து, அப்பொடியை கொண்டு தினமும் காலையில் பல் துலக்கி வந்தால் பற்களில் ஏற்படும் வலி நீங்கி, பற்கள் மற்றும் பல் ஈறுகள் உறுதியாகும்.
சுக்கான் கீரையோடு பூண்டு, சின்ன வெங்காயம் சேர்த்து, நன்கு வதக்கி, அதை சட்னிபோல் செய்து சாப்பிட்டு வந்தால் செரிமான சக்தி அதிகரிக்கும். நன்கு பசியைத் தூண்டும்.
சுக்கான் கீரை இயற்கையிலேயே இரத்தத்தைச் சுத்தப்படுத்தும் தன்மை கொண்டது. சுக்கான் கீரையை நன்கு நீர்விட்டு அலசி, அதனுடன் சின்ன வெங்காயம், பூண்டு, தேங்காய் சேர்த்து நன்கு வதக்கி, பின் சட்னி பதத்தில் அரைத்து காலை உணவில் சேர்த்து சாப்பிட்டு வந்தால் இரத்த சுத்தி ஏற்படும்.