நாள்தோறும் சமையல் வேலைகள் நடக்கும் சமையலறையில் பல்வேறு துர்நாற்றங்கள் ஏற்படுவது பிரச்சினையாக உள்ளது. வீட்டில் உள்ள பொருட்களை கொண்டே சமயலறையை வாசனையாக்குவது எப்படி என பார்ப்போம்.
ஒரு துணியில் கற்பூரத்தை வைத்து மடித்து கிச்சன் மூலைகளில் வைத்தால் துர்நாற்றம் விலகும். இந்த வாசத்தால் சிறிய பூச்சிகள் கிச்சனுக்குள் வராது.
பஞ்சை எடுத்து எசன்ஷியல் ஆயிலில் நனைத்து கிச்சன் மூலைகளில் வைக்க துர்நாற்றம் விலகும்
பேக்கிங் சோடாவை தண்ணீரில் கலந்து சமையலறையில் ஸ்ப்ரே செய்து வந்தால் துர்நாற்றம் வராது. வாரம் ஒருமுறை இவ்வாறு செய்ய வேண்டும்.
ஒரு பாத்திரத்தில் நீர் நிரப்பி அதில் மல்லி, ரோஜா போன்ற வாசனை பூக்களை வைத்தால் துர்நாற்றம் வீசாது. கிச்சனும் நறுமணமாக இருக்கும்
எலுமிச்சை தோல், லவங்கப்பட்டையை நீரில் கொதிக்க வைத்து சமையலறையில் ஸ்ப்ரே செய்தால் வாசமாக இருக்கும்.
வெள்ளை வினிகரை தண்ணீரில் கலந்து கிச்சன் முழுவதும் தெளித்தால் துர்நாற்றம் மறையும்.
வாரம் ஒருமுறை கிச்சனின் அனைத்து பகுதிகளையும் சோப்பு தண்ணீரில் நனைத்த துணியால் சுத்தம் செய்து வந்தால் துர்நாற்றம் பெரும்பாலும் ஏற்படாமல் தடுக்கலாம்.