அடுத்த ஜேம்ஸ்பாண்ட் யார்? பிரபல கறுப்பின நடிகரா? – ஹாலிவுட்டில் பரபரப்பு!

செவ்வாய், 2 நவம்பர் 2021 (11:18 IST)
பிரபல ஜேம்ஸ் பாண்ட் வரிசை படங்களில் நடித்து வந்த டேனியல் க்டெய்க் அதிலிருந்து விலகிய நிலையில் அடுத்த ஜேம்ஸ்பாண்ட் யார் என்ற கேள்வி எழுந்துள்ளது.

1960 தொடங்கி இதுவரை 25 ஜேம்ஸ்பாண்ட் படங்கள் எடுக்கப்பட்டுள்ள நிலையில் ஷான் கொனெரி தொடங்கி டேனியல் க்ரெட்ய்க் வரை வரலாறு பல ஜேம்ஸ்பாண்ட் நடிகர்களை சந்தித்துள்ளது. தற்போது வெளியான 25வது படமான நோ டைம் டூ டை படத்துடன் டேனியல் க்ரெய்க் ஜேம்ஸ்பாண்ட் படங்களில் இருந்து ஓய்வு பெற்றுள்ளார்.

இந்நிலையில் அடுத்த ஜேம்ஸ்பாண்டாக நடிக்க போவது யார் என்ற கேள்வி ஹாலிவுட் வட்டாரத்தில் பரபரப்பாக விவாதிக்கப்பட்டு வருகிறது. அடுத்த ஜேம்ஸ்பாண்ட் கதாப்பாத்திரத்திற்கு டாம் ஹார்டி, மைக்கெல் பாஸ்பெண்டர், சூப்பர் மேனாக நடித்த ஹென்றி கெவில் போன்றோர் பெயர்களும் அடிபடுகிறது. இதுமட்டுமல்லாம் முதன்முறையாக ஜேம்ஸ்பாண்ட் கதாப்பாத்திரத்தில் ஒரு கருப்பினத்தவரை நடிக்க வைக்கலாம் என திட்டமிடப்படுவதாகவும், இதற்காக இட்ரிஸ் எல்பா பெயர் பேசப்பட்டு வருவதாகவும் கூறப்படுகிறது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்