பிரபல கிரிக்கெட் வீரருடன் சித்தார்த் நடிகைக்கு திருமணம்!

வெள்ளி, 11 அக்டோபர் 2019 (12:50 IST)
நடிகர் சித்தார்த் நடிப்பில் கடந்த 2013ம் ஆண்டு வெளிவந்த "உதயம் என்.ஹெச்.4" படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமாகி இளம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் நடிகை அஷ்ரிதா ஷெட்டி. அதையடுத்து ஒரு கன்னியும் 3 களவாணியும்’, ‘ இந்திரஜித்’ , நான் தான் சிவா போன்ற சில படங்களில் நடித்திருந்தாலும் உதயம் என்.ஹெச்.4 தான் அவ்ருக்கு ஒரு நல்ல அடையாளத்தை பெற்று தந்தது. அதிலும் குறிப்பாக அந்த படத்தில் இடம் பெற்ற "யாரோ இவன் யாரோ இவன்" என்ற பாடல் இன்று வரை பலருக்கும் ஃபேவரைட்டான பாடல். 


 
பின்னர் படங்களில் நடிப்பதிலிருந்து ஒதுங்கியிருந்த அஷ்ரிதா ஷெட்டிக்கு தற்போது 26 வயதாகிறது. இவர் இந்திய கிரிக்கெட் வீரர் மணீஷ் பாண்டே காதலித்து வந்துள்ளார்.  அஷ்ரிதாவுடனான தனது காதல் விவகாரத்தை மணீஷ் வெற்றிகரமாக ரகசியமாக வைத்திருந்தார். 


 
இந்நிலையில் தற்போது இருவீட்டாரின் சம்மதத்துடன் இவர்களுக்கு வருகிற  டிசம்பர் 2 ஆம் தேதி முபையில் திருமணம் நடைபெறவுள்ளது. இந்த திருமணத்தில் உறவினர்கள் , நெருங்கிய நண்பர்கள் மற்றும் சில கிரிக்கெட் வீரர்களும் பங்கேற்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்