ஹாலிவுட்டில் சிறந்த படங்களுக்கு ஆஸ்கர் வழங்குவது மிகப்பெரிய அங்கீகாரமாக கருதப்படுவது போல, இசைக்கு உயரிய விருதாக கிராமி விருதுகள் உள்ளன. ஆண்டுதோறும் வழங்கப்படும் கிராமி விருதுகளில் கண்ட்ரி, ஜாஸ், பாப், சிறந்த நடனம், உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளில் விருதுகள் வழங்கப்படுகின்றன.
இந்த ஆண்டு கிராமி விருதுகளில் ஹாரி ஸ்டைல்ஸ், டைலர் ஸ்விஃப்ட் உள்ளிட்ட பலரது ஆல்பங்கள் கிராமி விருதை பெற்றுள்ளன. இந்த விருது விழாவில் சிறந்த நடனம மற்றும் எலெக்ட்ரானிக் ரெக்கார்டிங் பிரிவில் பிரபல பாடகியும், பாடலாசிரியருமான பியோன்செவின் ”ப்ரேக் மை சோல்” (Break my soul) பாடல் விருதை வென்றுள்ளது. சிறந்த எலெக்ட்ரானிக் மியூசிக் ஆல்பம் பிரிவில் பியோன்சேவின் “ரெனேசன்ஸ் (Renaissance)” ஆல்பமும், பெஸ்ட் ட்ரெடிஷனல் ஆர் அண்ட் பி பெர்பார்மென்சில் பியோன்சேவின் “ப்ளாஸ்டிக் ஆப் தி சோஃபா (Plastic off the sofa)” பாடலும் கிராமி விருதை வென்றுள்ளன.