மார்பகத்தை அகற்றிய பின், ஐ யம் ஹேப்பி

செவ்வாய், 11 மார்ச் 2014 (12:07 IST)
பெண்களை அச்சுறுத்தும் மார்பகப் புற்று நோய் ஏஞ்சலினா ஜோலியையும் விடவில்லை. சென்ற வருடம் தனது இரு மார்பகங்களையும் அறுவை சிகிச்சை செய்து அகற்றினார் ஜோலி. அதன் பிறகு வாழ்க்கை எப்படி போகிறது?
FILE

கிரேட். மார்பகத்தை அகற்றுவது என்று நான் எடுத்த முடிவு மகிழ்ச்சியளிக்கிறது. நான் நல்லமுறையில் ரிக்கவரி ஆகி வருகிறேன். என்னைப் போன்று அறுவைச் சிகிச்சை செய்து கொண்ட பெண்களுடன் உரையாடும் போது நான் அவர்களுடன் ரொம்பவும் இணக்கமாக உணர்கிறேன் என்று ஜோலி கூறியுள்ளார்.

2011 ல் இன் தி லேண்ட் ஆஃப் பிளட் அண்ட் ஹனி படத்தை இயக்கிய ஜோலி தற்போது அன்ப்ரோக்கன் படத்தை இயக்கி வருகிறார். அறுவைச் சிகிச்சைக்குப் பின் அன்ப்ரோக்கன் படவேலைகளில் முழுமையாக கவனம் செலுத்துவதாகவும் அவர் கூறியுள்ளார்.
FILE

மார்பகப் புற்றுநோய் வருவதற்கு 87 சதவீதம் ஜோலிக்கு ரிஸ்க் இருப்பதாக மருத்துவர்கள் கூறியதை அடுத்து இந்த அறுவைச் சிகிச்சையை அவர் செய்து கொண்டது குறிப்பிடத்தக்கது.

வெப்துனியாவைப் படிக்கவும்