மாத சிவராத்திரி நாளில் சிவ வழிபாடு !!

வியாழன், 25 ஆகஸ்ட் 2022 (14:36 IST)
மாத சிவராத்திரி நாளில், சிவ வழிபாடு செய்வதும், சிவ தரிசனம் செய்வதும், நமசிவாயம் சொல்லி ஜெபிப்பதும் மகத்தான பலன்களை தந்தருளும் என்பது ஐதீகம். சிவராத்திரியில் பல வகைகள் காணப்படுகின்றன.


ஒவ்வொரு மாதமும் சிவராத்திரி வருவதுண்டு. இந்த நாளில் சிவபெருமானை வணங்குவதன் மூலம் வாழ்வின் அனைத்து வளங்களையும் பெற முடியும். சிவராத்திரியை பற்றி அற்புதமான தகவல்கள் அதிகம் உள்ளன. சிவ சிவ என்று சொன்னால் போதும் துன்பங்கள் எல்லாம் திசை தெரியாமல் போகும்.

மாத சிவராத்திரி நாளில், சிவ வழிபாடு செய்வதும், சிவ தரிசனம் செய்வதும், நமசிவாயம் சொல்லி ஜெபிப்பதும் மகத்தான பலன்களை தந்தருளும் என்பது ஐதீகம்.

சிவம் என்ற சொல்லுக்கு மங்கலம் தருபவர் என்று பொருள். சிவபெருமான் லிங்கமாக உருவமெடுத்த தினமே சிவராத்திரி ஆகும். நமசிவாய என்னும் மந்திரத்தை மனதில் நினைக்க எந்த தீமைகளும் நெருங்காது.

மாசி மாதத்தில் வரும் சிவராத்திரியை மகா சிவராத்திரி என்பார்கள். மாத சிவராத்திரியின் மகிமையை சிவபெருமான் நந்திக்கு சொன்னார். நந்தி மற்றவர்களுக்கு சொன்னதாக புராணங்கள் கூறுகின்றன.

மாத சிவராத்திரியானது தேய்பிறை சதுர்த்தசி இரவு கொண்டாடப்படுகிறது. இந்த சிவராத்திரி நாளில் சிவபக்தர்கள் விரதம் இருந்தும், சிவாலயம் சென்று இரவு கண் விழித்தும் எம்பெருமானை வழிபடுவார்கள்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்