புரட்டாசி சனிக்கிழமை பெருமாளுக்கு உகந்ததாக கூறப்படுவது ஏன்...?

சனி, 24 செப்டம்பர் 2022 (16:20 IST)
புரட்டாசி மாதத் திருவோணம், திருப்பதி மலையப்ப சுவாமி தன்னை வெளிப்படுத்திக் கொண்ட தினம் என்றால், புரட்டாசி சனிக் கிழமையிலோ சனிபகவான் அவதரித்து புரட்டாசிக்கு முக்கியத்துவம் தந்து விட்டார்.


அதன் காரணமாக சனிபகவானால் ஏற்படும் கெடுபலன்கள் குறைய, காக்கும் கடவுளான திருமாலை வணங்குவது மரபாகிவிட்டது. இதற்காகத்தான் புரட்டாசி சனி விரதத்தை பக்தர்கள் வழி வழியாக கடைபிடிக்கின்றனர்.

புரட்டாசி மாதத்தில் ஒருநாள்கூட மனிதன் உபயோகப்படுத்த முடியாமல் அல்லது உபயோகப்படுத்தக்கூடாத நாளாக இருந்து விரதத்திற்காக மட்டும் அமைந்திருக்கிறது.

புரட்டாசி சனிக்கிழமை பெருமாளுக்கு “தளியல்” போடுவது வழக்கம். முடியாதவர்கள் 1வது, 5வது சனிக்கிழமையில் போடுவார்கள். பெருமாள் பாயாசபிரியர் என்ப தால் பாயாசம் செய்வது முக்கியமானது.

ஒவ்வொரு மாதமும் அஷ்டமி தினத்தன்று உண்ணா நோன்பு இருந்து சிவபெருமானை வழிபட்டால் எல்லா வளமும் பெற முடியும். புரட்டாசி மாதம் வரும் அஷ்டமிக்கு சம்புகாஷ்டமி என்று பெயர். அன்று தயிர் மட்டும் அருந்தி சிவபூஜை செய்தால் சகல சவுபாக்கியங்களையும் பெற முடியும்.

புரட்டாசி மாதம் வளர்பிறை சதுர்த்தி திதியில் சித்தி விநாயக விரதம் இருந்து வழிபட்டால் எதிரிகள் தொல்லை இல்லாமல் போய் விடும். புரட்டாசி மாதம் எந்த விரதம் இருந்தாலும் செல்வம், ஆயுள், ஆரோக்கியம் ஆகிய மூன்றும் குறைவின்றி கிடைக்கும்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்