சனிக்கிழமை சதுர்த்தி நீண்ட ஆயுள் தரும். சங்கடஹர சதுர்த்தி விரதம் இருப்பவர்களுக்கு துன்பங்கள் நீங்கி நிலையான சந்தோஷம் கிடைக்கும். மிகச் சிறப்பான கல்வி அறிவு, புத்தி கூர்மை, நீண்ட ஆயுள், நிலையான செல்வம், நன்மக்கட்பேறு என பலவிதமான நன்மைகள் கிடைக்கும். கேது திசை புக்தி நடப்பவர்களும் இந்த விரதத்தை மேற்கொண்டால் வாழ்வில் எல்லா தடைகளும் விலகும்.
வேலையில்லாமல் சிரமப்படுபவர்களும், நீண்ட நாட்கள் நோயினால் அவதிப்படுபவர்களும், சங்கடங்கள் தீர இந்த சங்கடஹர சதுர்த்தி நாளில் விநாயகரை நினைத்து விரதம் இருக்கலாம். இதனால் தீராத நோய்களும் தீரும், திருமண தடை அகலும்.
ஓவ்வொரு மாதமும் சங்கடஹர சதுர்த்தி விரதம் இருப்பவர்களுக்கு எக்காரியத்திலும் தடை, தாமதங்கள் இல்லாமல் வெற்றிகள் கிடைக்கும். தொழில், வியாபாரம் போன்றவற்றில் மிகுந்த லாபங்கள் கிடைக்கும்.
விநாயகருக்கு அருகம்புல் மாலை சார்த்துவதும் வெள்ளெருக்கு மாலை சார்த்துவதும் விசேஷம். அதேபோல், வீட்டில், விளக்கேற்றி, விநாயகரை மலர்களால் அலங்கரித்து, சர்க்கரைப் பொங்கல், பாயசம், கேசரி, மோதகம் கொழுக்கட்டை, சுண்டல் என ஏதேனும் ஒன்றைக் கொண்டு நைவேத்தியம் செய்வது மகத்துவம் வாய்ந்தது.