தெய்வங்களை வழிபட உகந்த கிழமைகள் எது...?

புதன், 19 அக்டோபர் 2022 (10:09 IST)
எந்த கிழமைகளில் எந்த தெய்வங்களை வழிபாடு செய்தால் பலன் உண்டு என்பதை தெரிந்துக்கொண்டு செய்யும்போது மிகுந்த பலனை பெறலாம்.


ஞாயிற்றுக்கிழமையில் வழிபட உகந்த தெய்வமாக நவகிரக நாயகனும், முதன்மை கடவுளாக இருக்கக்கூடிய சூரிய பகவான் உள்ளார். இந்த நாட்களில் விரதம் இருந்து வழிபாடுகள் செய்து வர சூரிய தோஷம் விலகும். மேலும் இந்த கிழமையில் விரதம் இருந்தால் தீராத நோய்களும் அகலும்.

திங்கட்கிழமையில் சிவனை வழிபாடு செய்யவேண்டும். திங்கட்கிழமை சோமவாரம் என்ற பெயரும் உண்டு. இது சிவனுக்கு உகந்த தினம் ஆகும். ஈசனைக்கு விரதங்கள் இருந்து பால், அரிசி மற்றும் சர்க்கரை போன்றவற்றை படையலாகவும் வைத்து வழிபடலாம்.

செவ்வாய்க்கிழமையில் முருகன், அனுமன், துர்க்கை ஆகியோரை வழிபடலாம். செவ்வாய்க்கிழமை ராகு காலத்தில் எலுமிச்சை தீபம் ஏற்றி வருவது மிகுந்த பலனை தரும்.

புதன் கிழமையில் விநாயகப்பெருமானை வணங்கி சுப காரியங்களை மேற்கொள்ளலாம். விக்னங்களை நீக்கக்கூடிய விநாயகரை வணங்குவதால் எந்த காரியமும் தடை இன்றி வெற்றி கிடைக்கும்.

வியாழன் கிழமையில் குரு தட்சிணாமூர்த்தியை வழிபட உகந்ததாகும். விஷ்ணு பகவான் மற்றும் லக்‌ஷ்மி தேவியை வணங்குவது மிகவும் உத்தமம். மேலும் வியாழன் கிழமை குரு நவகிரஹ வழிபாடு நல்ல பலனை பெற்றுத்தரும்.

வெள்ளிக்கிழமை என்றாலே அது அம்மனுக்கு உகந்ததாகும். வெள்ளிக் கிழமையில் விரதமிருந்து துர்க்கை அம்மனையும், அவரது உப தெய்வங்களையும் வழிபாடு செய்யலாம். மகாலட்சுமி வழிபாடு செல்வ வளத்தை கொடுக்கும்.

சனிக்கிழமைகளில் ஆஞ்சநேயர், காளி தேவி, திருமால் போன்ற தெய்வங்களை வழிபாடு செய்வது மிகுந்த பலனை அளிக்கவல்லது. அதிலும் சனிக்கிழமைகளில் சனி பகவானுக்கு எள் எண்ணெய் தீபம் ஏற்றி வழிபாடு செய்யலாம்.

Edited by Sasikala
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்