வீட்டில் செல்வ செழிப்பு ஏற்பட இந்த நாட்களில் வழிபாடு செய்வது நல்லதா...?

செவ்வாய், 18 அக்டோபர் 2022 (09:57 IST)
தேய்பிறை அஷ்டமி திதிகளில் சிகப்பு நிற ஆடை அணிந்து, நெய் விளக்கு ஏற்றி, வடைமாலை சாற்றி, சிகப்பு நிற மலர்களைக் கொண்டு அர்ச்சித்து, வெள்ளைப் பூசனியில் நெய் தீபம் ஏற்றிவர நல்ல பலன் கிடைக்கும்.


ஞாயிற்றுக்கிழமை மாலை ராகு கால நேரத்தில் பைரவருக்கு 11 நெய் தீபம் ஏற்றி விபூதி அல்லது ருத்திராபிஷேகம் செய்து, வடைமாலை சாற்றி சகஸ்ரநாம அர்ச்சனை செய்து வழிபட்டால் திருமணம் ஆகாதவர்களுக்கு விரைவில் திருமணம் கைகூடும்.

தினமும் பைரவர் காயத்திரியையும், பைரவி காயத்திரியையும் ஓதி வந்தால் விரைவில் செல்வம் பெருகும். வெல்லம் கலந்த பாயாசம், உளுந்து வடை, பால் தேன் பழம், வில்வம் இலைகளால் மூலமந்திரம் சொல்லி அர்ச்சனை செய்ய தொழில் விருத்தியாகும்.

பைரவரை வழிபாடு செய்வதால் வறுமை, பகைவர்களின் தொல்லைகள், பயம் நீங்கி அவர் அருளால் அஷ்ட ஐஸ்வர்யங்களும், தன லாபமும், வியாபார முன்னேற்றம். பணியாற்றும் இடங்களில் தொல்லைகள் நீங்கி மனத்தில் மகிழ்ச்சியைப் பெறலாம்.

நம்பிக்கையுடன், பக்தியுடன் சொர்ணாகர்ஷண பைரவர் படத்தை வீட்டில் வைத்து தினந்தோறும் தூப தீபம் காட்டி வழிபட்டு வருவதுடன் தேய்பிறை அஷ்டமி திதியில் திருவிளக்கு பூஜை செய்து பலவிதமான மலர்களைக் கொண்டு பூஜித்து வணங்கி வந்தால் வீட்டில் செல்வச் செழிப்பு ஏற்படும்.

வியாபாரிகள் கல்லாப் பெட்டியில் சொர்ண ஆகர்ஷண பைரவர் , பைரவி சிலை அல்லது படத்தை வைத்து பூஜித்து வர கடையில் வியாபாரம் செழித்து செல்வம் பெருகி வளம் பெறுவார்கள்.

Edited by Sasikala

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்