வைகாசி விசாகம்: குறைகளை நீக்கி அருள் தரும் முருக வழிபாடு!

வெள்ளி, 2 ஜூன் 2023 (08:04 IST)
ஒவ்வொரு தமிழ் மாதத்திலும் குறிப்பிட்ட நாள் சிறப்பு வாய்ந்தது. அப்படியாக வைகாசி மாதத்தில் சிறப்பு வாய்ந்தது விசாகம் நாள். இந்நாளில் முருகனை வழிபடுவதின் சிறப்புகள் பல.



ஆவணி அவிட்டம், ஆடிப்பூரம் போல வைகாசி மாதத்தில் மிகவும் புனிதமான நாளாக வருவது விசாகம். அப்பன் ஈசனுக்கே ப்ரணவ மந்திரத்தை உச்சரித்தவரும், படைப்பின் பிரம்மாவை சிறை வைத்தவருமான முருக பெருமான் அவதரித்தது வைகாசி மாதம் விசாக நட்சத்திரத்தில்தான். வைகாசி விசாகம் முருக கடவுளுக்கு சிறப்பான நாளாகும்.

இந்நாளில் முருக பெருமானை மனமுருக வேண்டி பக்தர்கள் பால்குடம், காவடி எடுத்து தங்கள் வேண்டுதல்களை நிறைவேற்றுகின்றனர். இந்த நன்நாளில் முருகனை நினைத்து மனமுருகி வேண்டி விரதம் இருப்பதும், கோவிலுக்கு சென்று வருவதும் சகல குறைகளையும் போக்கு சௌபாக்கியத்தை அளிக்கிறது.

குழந்தை பேறு இல்லாதவர்கள், குடும்ப பிரச்சினை உள்ளவர்கள் வைகாசி விசாகத்தில் முருகனை மனமுருகி வேண்டி விரதம் இருந்து வழிபட்டால் நன்மைகள் நடக்கும். விசாக நட்சத்திரத்தில் பிறந்தவர்களும், துலாம் ராசிக்காரர்களும் முருகனை மனமுருகி வேண்டி விசிறி, பானகம், தண்ணீர் போன்றவற்றை தானமாக அளித்தால் வாழ்வின் துன்பங்களை நீக்கி அருள் புரிவர் குன்றின் மேல் கோவில் கொண்ட சுப்பிரமணியன்.

Edit by Prasanth.K

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்