இன்று விஜயா ஏகாதேசி.. விரதம் இருந்தால் பல பயன்கள்..!

சனி, 18 மார்ச் 2023 (14:20 IST)
இன்று விஜயா ஏகாதேசையை முன்னிட்டு விரதமிருந்தால் ஏராளமான பலன்கள் கிடைக்கும் என ஆன்மீகவாதிகள் தெரிவித்துள்ளனர். பங்குனி மாதத்தில் தேய்பிறையில் வரும் ஏகாதேசியான விஜயா ஏகாதேசி என்று கூறுவது உண்டு. 
 
இந்த தினத்தில் விரதம் இருந்தால் எந்த தடைகள் இருந்தாலும் அந்த தடைகள் நீங்கி சுப காரியம் வெற்றிகரமாக நடக்கும் என்று ஐதீகம். பங்குனி தேய்பிறை விஜயா ஏகாதேசியில் பெருமாளை தரிசிக்க வேண்டும் என்றும் துளசி மாலை சார்த்தி பிரார்த்தனைகள் செய்தால் ஏராளமான பலன் கிடைக்கும் என்றும் கூறப்படுகிறது.. 
 
விஜயா ஏகாதேசி நாளில் வாழை இலையில் ஏழு விதமான தானியங்களை ஒன்று சேர்த்து அதன் மீது ஒரு கலசம் வைத்து பிரார்த்தனை செய்தால் கடல் கடந்து சென்று வெற்றி பெறுவார்கள் என்பது ஐதீகமாக உள்ளது. எனவே இன்றைய விஜய ஏகாதேசியில் அனைவரும் தவறாமல் பிரதமருக்கு அறிவுறுத்தப்படுகின்றனர்
 
Edited by Mahendran

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்