திருநீறு எதற்காக அணிகிறோம் தெரியுமா...!

திருநீறு (விபூதி): இருபுருவங்களின் நடுப்பகுதியில் மிக நுண்ணிய நரம்பு அதிர்வு நிலை உள்ளது. அதனால் மன வசியம் எளிதாக வசியம் செய்ய முடியும் என்பதற்காகவே,  நெற்றியில் திலகமும், திருநீறு, திருமண் போன்றவற்றை இடுவது வழக்கம். திருநீறு (விபூதி) சைவர்களால் நெற்றியில் இடப்படும் புனித அடையாளம். இது  ஜசுவரி்யம் என்றும் கூறப்படும்.
திருநீற்றை நான்கு வகைகளாகப் பிரிக்கின்றனர்.
 
1. கல்பம்
2. அணுகல்பம்
3. உபகல்பம்
4. அகல்பம்
 
கல்பம்: கன்றுடன் கூடிய நோயற்ற பசுவின் சாணத்தைப் பூமியில் விழாது தாமரை இலையில் பிடித்து உருண்டையாக்கி பஞ்ச பிரம்ம மந்திரங்களால் சிவாக்கினியில் எரித்து எடுப்பதே கல்பத் திருநீறு எனப்படும்.
 
அணுகல்பம்: ஆரண்யங்களில் (காடுகளில்) கிடைக்கும் பசுஞ்சாணங்களைக் கொண்டு முறைப்படி தயாரிக்கப்படுவது அணுகல்பத் திருநீறு எனப்படும்.
உபகல்பம்: மாட்டுத் தொழுவம் அல்லது மாடுகள் மேயும் இடங்களில் இருந்து எடுத்த சாணத்தைக் காட்டுத்தீயில் எரித்து, பின்பு சிவாக்கினியில் எரித்து எடுக்கப்படுவது உபகல்பத் திருநீறு எனப்படும்.
 
அகல்பம்: அனைவராலும் சேகரித்துக் கொடுக்கப்படும் சாணத்தைச் சுள்ளிகளால் எரித்து எடுப்பது அகல்பத் திருநீறு எனப்படும்.
 
நீரில்லாத நெற்றிபாழ் என்பதும் ஆன்றோர் வாக்கு காலையில் எழுந்து நீராடி இறைவனை வணங்கி நெற்றி நிறைய நீறு பூசிகொள்பவனே நிறைமனிதன் என்பது இதன் கருத்து நெற்றியில் பூசப்படும் நீறு சிவசின்னம் மட்டுமல்ல அது மனிதனை மாற்று மனிதர்களின் எதிர்மறை சிந்தனையிலிருந்து காக்கும் கவசமாகவும் மருத்துவ பொருளாகவும் இருக்கிறது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்