பெண்கள் ஐந்து உறுப்புகள் நிலத்தில் படும்படி வீழ்ந்து வணங்க வேண்டும். அந்த ஐந்து உறுப்புகள் தலை, 2 கைகள், 2 முழந்தாள். பிறகு இரு கரங்களையும் மார்பின் மேல் குவித்து, சிவனை எண்ணிக்கொண்டே திருக்கோயில் சுற்றினை மூன்று முறை வலம் வர வேண்டும். ஐந்து, ஏழு, ஒன்பது என்ற எண்ணிக்கையிலும் வலம் வரலாம்.