கோலாகலமாக நடைபெற்ற மீனாட்சி-சுந்தரேஸ்வரர் திருமணம்

மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் சித்திரை திருவிழா கடந்த 18-ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. சித்திரை திருவிழாவின் முக்கிய நிகழ்வான  மீனாட்சி திருக்கல்யாணம் இன்று கோலாகலமாக நடந்தது.
சித்திரை திருவிழாவின் முக்கிய நிகழ்வான மீனாட்சி திருக்கல்யாணம் இன்று கோலாகலமாக நடந்தது. மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கல்யாணம் கோயிலில் உள்ள மேற்கு மாடி, வடக்கு ஆடி வீதியில் உள்ள அலங்கார திருமண மண்டபத்தில், காலை 9:05 மணி முதல் 9:29 மணிக்குள் வேத மந்திரங்கள் முழங்க திருக்கல்யாணம் கோலாகலமாக நடைபெற்றது. இதனை தொடர்ந்து நாளை தேரோட்டம் நடைபெறுகிறது. 
 
மீனாட்சி-சுந்தரேஸ்வரர் திருமண கோலத்தில் அம்மனுடன் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். 9ம் நாளான நேற்று அம்மன் எட்டு திசைக்கு சென்று போரிடும்  நிகழ்ச்சியாக திக்குவிஜயம் நடந்தது. முன்னதாக அதிகாலை 4 மணிக்கு கோயில் சேர்த்தி மண்டபத்தில் மீனாட்சியும், சொக்கநாதரும் மணமக்களுக்குரிய  அலங்காரத்துடன் காட்சியளித்தனர்.  
சித்திரை திருவிழாவின் 10ஆம் நாளான இன்று மீனாட்சி திருக்கல்யாணம் நடந்தது. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்