‘ஸ்லாட்டட் சர்வ தரிசனம்’ : திருப்பதி தேவஸ்தானம் அறிவித்த முக்கிய அறிவிப்பு

புதன், 2 நவம்பர் 2022 (20:20 IST)
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் இனி சுவாமியை தரிசிக்க நீண்ட நேரம் காத்திருக்க வேண்டிய அவசியமில்லை என்பதும் அதற்கு பதிலாக ‘ஸ்லாட்டட்  சர்வ தரிசனம் என்ற முறையை கொண்டு வரப்பட்டு உள்ளதாகவும் திருமலை திருப்பதி தேவஸ்தானம் தெரிவித்துள்ளது 
 
இதன்படி தரிசனம் செய்ய இலவச டோக்கன் வாங்கும்போதே பக்தர்கள் தாங்கள் விரும்பும் தேதி மற்றும் நேரத்தை குறிப்பிட்டு அந்த நேரத்தில் தரிசனம் செய்ய டோக்கன் பெற்று கொள்ளலாம் 
 
அதன் பின்னர் தரிசனம் நேரத்திற்கு ஒரு சில மணி நேரங்களுக்கு முன்னர் கோயிலுக்கு சென்றால் போதும் என்பதும் மணிக் கணக்கிலோ அல்லது நாள் கணக்கிலோ இனிமேல் திருப்பதி ஏழுமலையானை தரிசிக்க காத்திருக்க வேண்டிய அவசியமில்லை என்றும் திருமலை திருப்பதி தேவஸ்தானம் தெரிவித்துள்ளது இதனால் பக்தர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர் 
 
இந்த நிலையில் திருப்பதி தேவஸ்தானத்தில் இலவச டோக்கன்களை பெற்றுக்கொள்ள 30 கவுண்டர்கள் அமைக்கப்பட்டுள்ளதாகவும் கீழ்த்திருப்பதி மற்றும் மேல்திருப்பதிகளிலும் டோக்கன்களை பக்தர்கள் பெற்றுக்கொள்ளலாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது
 
தினமும் 15 ஆயிரம் டோக்கன்கள் விநியோகிக்கப்படும் என்றும் சனி ஞாயிறு மட்டும் 25 ஆயிரம் டோக்கன்கள் விநியோகிக்கப்படும் என்றும் டோக்கன்களை பெற ஆதார் அட்டை கட்டாயம் என்றும் தேவஸ்தானம் தெரிவித்துள்ளது
 
Edited by Mahendran

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்