சென்னைக்கு வடமேற்கே சென்னைக் கொல்கத்தா நெடுஞ்சாலையில் 33வது கிலோ மீட்டரில் இடது பக்கம் தெரியும் சாலையில் சிறுவாபுரி பாலசுப்பிரமணிய கோவில் நுழைவாயில் உள்ளது. இந்த நுழைவாயிலில் இருந்து மூன்று கிலோ மீட்டர் தூரம் சென்றால் சிறுவாபுரி கிராமமும், அந்த கிராமத்தில் ஒரு முருகன் ஆலயம் அமைந்துள்ளது.
இதே ஊரில் ராமர் கோயில், விநாயகர் கோயில், ஆகியவை இருந்தாலும், சிறுவாபுரி முருகன் கோவில் மிகவும் புகழ்பெற்றது என்பதும் இங்கு தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகை தருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.