நீ எந்த காரியத்தை செய்து கொண்டிருந்தாலும், எங்கிருந்தாலும், எதை செய்தாலும் என்னையே ஸ்மரணை செய்து, தியானம் செய்து உன் வேலையை செய், அதை நான் வெற்றி அடையும் படி செய்வேன்.
காமம், குரோதம், மதம், மாச்சரியம் ஆகியவற்றிற்கு தூரமாக இருந்து இயங்குபவன் உத்தம புருஷன் ஆகிறான். உன் இதயத்தில் என்னை ஸ்தாபிதம் செய். என் சுத்த தத்துவ வடிவத்தால் உன் இதயத்தை தூய்மை படுத்திகொள்.
இந்த மசுதி-யும், துவாரகமாயி-யும் நம்மை பெற்றெடுத்த தாயாகும். இங்கு அபாரமான தயை, இரக்கம், கருணை, தர்மம், உதாரகுணம், சாந்தி முதலியன ஒவ்வொரு செங்கல்லிலும் உண்டு.