புதுவை மணக்குள விநாயகர் கோவில் சிறப்புகள்..!

Mahendran

வியாழன், 15 பிப்ரவரி 2024 (18:55 IST)
புதுவையின் முக்கிய கோவில்களில் ஒன்றான மணக்குள விநாயகர் கோவிலின் சிறப்புகள் குறித்து தற்போது பார்ப்போம்
 
இந்தியாவில் விநாயகருக்கு தங்கத்தால் ஆன மூலஸ்தான கோபுரம் இத்தலத்தில் மட்டும் தான் உள்ளது. 7 அடி உயரம், 75 கிலோ தங்கம் பயன்படுத்தி செய்யப்பட்ட இந்த கோபுரம் 2008-ம் ஆண்டு அமைக்கப்பட்டது.
 
பெரும்பாலும் பிரம்மச்சாரியாக பாவிக்கப்படும் விநாயகர், இத்தலத்தில் சித்தி, புத்தி என்னும் மனைவிகளுடன் காட்சியளிக்கிறார். இதனால் திருமண வரம் வேண்டுவோர் இங்கு வழிபாடு செய்கின்றனர்.
 
மூலவர் இருக்கும் இடம் ஒரு கிணறு. பீடத்தின் இடது பக்கம் மூலவருக்கு அருகில் மிகவும் ஆழமான ஒரு சிறிய குழி உள்ளது. இதன் ஆழத்தை இதுவரை யாராலும் கண்டறிய முடியவில்லை.
 
 மூலவருக்கு அருகில் உள்ள சிறிய குளத்தில் உள்ள நீர் தீராத நோய்களை தீர்க்கும் என்பது நம்பிக்கை.
 
பிரெஞ்சு மற்றும் ஆங்கிலேயர்களால் வழிபடப்பட்டதால் இவருக்கு "வெள்ளைக்கார பிள்ளையார்" என்ற பெயரும் உண்டு.
 
1666 ஆம் ஆண்டுக்கும் முன்பேயுள்ள 500 ஆண்டுகள் பழமையான கோவில் இது.
 
 புதுச்சேரியின் மிகவும் பிரபலமான மற்றும் புகழ் பெற்ற இந்து கோவில்களில் ஒன்றாகும்.
 
Edited by Mahendran

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்