வருடத்தில் 28 நாட்கள் மட்டும் திறந்திருக்கும் கொட்டியூர் சிவன் கோவில் - கேரளாவின் தனித்துவமான தல வரலாறு

Mahendran

செவ்வாய், 9 செப்டம்பர் 2025 (18:32 IST)
இந்தியாவில், குறிப்பிட்ட சில நாட்கள் மட்டும் திறந்திருக்கும் ஆலயங்கள் ஏராளம். அவற்றில் மிகவும் தனித்துவமானது கேரளாவின் கண்ணூர் மாவட்டத்தில் உள்ள கொட்டியூர் சிவன் கோவில். இந்த ஆலயம், வருடத்தில் வெறும் 28 நாட்கள் மட்டுமே பக்தர்களின் தரிசனத்திற்காக திறக்கப்படுகிறது.
 
கொட்டியூர் சிவன் கோயில்தான், வருடத்திற்கு 28 நாட்கள் மட்டுமே, அதாவது வைகாசி மாதத்தில் நடைபெறும் 'மகோற்சவ' திருவிழாவின்போது மட்டுமே திறக்கப்படும். மற்ற நாட்களில், பக்தர்கள் வழிபடுவதற்காக ஆற்றின் மற்றொரு கரையில் ஒரு கோயில் அமைக்கப்பட்டுள்ளது.
 
இந்த கோயிலில் நடைபெறும் 'வைகாசி மகோற்சவம்' வைகாசி சுவாதி நட்சத்திரத்தில் தொடங்கி, ஆனி சுவாதி வரை 28 நாட்கள் நடைபெறும். இந்த விழாவில் சுமார் 50 லட்சத்திற்கும் அதிகமான பக்தர்கள் கலந்துகொள்வார்கள். கேரள மாநிலம் கண்ணூரிலிருந்து சுமார் 70 கி.மீ. தொலைவிலும், தலச்சேரியிலிருந்து 60 கி.மீ. தொலைவிலும் கொட்டியூர் அமைந்துள்ளது.
 
Edited by Mahendran

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்