ஜூன் 3ஆம் தேதி பெளர்ணமி.. கிரிவலம் செய்ய உகந்த நேரம் அறிவிப்பு..!

வியாழன், 1 ஜூன் 2023 (18:58 IST)
நாளை மறுநாள் அதாவது ஜூன் மூன்றாம் தேதி பௌர்ணமி தினத்தை அடுத்து திருவண்ணாமலையில் கிரிவலத்திற்கு உகந்த நேரம் எது என்பது குறித்து அறிவிப்பு வெளியாகி உள்ளது.
 
ஒவ்வொரு மாதமும் திருவண்ணாமலையில் பௌர்ணமி தினத்தன்று ஆயிரக்கணக்கான பக்தர்கள் கிரிவலம் செல்லும் நிலையில் இந்த மாதம் வரும் சனிக்கிழமை காலை 11.16 மணிக்கு தொடங்கி மறுநாள் காலை 9.11 மணி வரை கிரிவலம் செல்லலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. 
 
இந்த மாதம் கிரிவலம் செல்ல வரும் பக்தர்களின் எண்ணிக்கை அதிகரிக்கலாம் என்பதால் கூடுதல் பாதுகாப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக கோவில் நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர்
 
Edited by Mahendran

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்