மனிதனாக பிறந்து விட்ட அனைவரின் பிறவி தோஷங்களை போக்குவது தான் பிரதோஷம். மற்ற நாட்களிலும், நேரங்களிலும் சிவபெருமானை வழிபடுவதற்கும் இந்த “பிரதோஷ நேரம்” மற்றும் அது வரக்கூடிய கிழமைகளில் வழிபடுவதற்கும் வித்தியாசம் உள்ளது.
வியாழன் பிரதோஷங்கள் வருகிற போது ஜாதகத்தில் குரு பகவானின் கோட்சாரம் சரியில்லாமல் இருப்பவர்கள், குரு பகவான் ஆதிக்கம் கொண்ட நட்சத்திரங்களில் பிறந்தவர்கள் பிரதோஷ நேரமான மாலை 4.30 மணியிலிருந்து 6.00 மணிக்குள்ளாக சிவன் கோவிலில் இருக்கும் நவகிரக சந்நிதிகளில், மஞ்சள் நிறப்பூக்களை வைத்து, 27 வெள்ளை கொண்டைக்கடலைகளை நிவேதித்து வணங்க வேண்டும்.
பின்பு நந்தி பகவான் சிவபெருமான் அம்மன் மற்றும் தட்சிணாமூர்த்தி ஆகியவர்களை வணங்க பொருளாதார பிரச்சனைகள், திருமண தடை, புத்திர பேறு இல்லாமை போன்ற பிரச்சனைகள் நீங்கும்.