அருள் தரும் ஆவணி தமிழ் மாத ராசிபலன்கள் 2025! – துலாம்

Prasanth K

சனி, 16 ஆகஸ்ட் 2025 (16:58 IST)
அருள் தரும் தமிழ் மாதமான ஆவணி மாதத்தில் உங்களுக்கான ராசிபலன் மற்றும் பரிகாரங்களை தெரிந்துக் கொள்ளுங்கள்

கிரகநிலை:
பஞ்சம ஸ்தானத்தில் சனி (வ), ராஹூ - பாக்கிய ஸ்தானத்தில் குரு, சுக்கிரன் - தொழில் ஸ்தானத்தில் புதன் - லாப ஸ்தானத்தில் சூர்யன், கேது - விரைய ஸ்தானத்தில் செவ்வாய் என கிரக நிலைகள் உள்ளன.

கிரகமாற்றம்:
21.08.2025 அன்று பாக்கிய ஸ்தானத்தில் இருந்து சுக்கிரன்  தொழில் ஸ்தானத்திற்கு மாறுகிறார்.
25.08.2025 அன்று தொழில் ஸ்தானத்தில் இருந்து புதன் லாப ஸ்தானத்திற்கு மாறுகிறார்.
11.09.2025 அன்று லாப ஸ்தானத்தில் இருந்து புதன் அயன சயன போக ஸ்தானத்திற்கு மாறுகிறார்.
14.09.2025 அன்று அயன சயன போக ஸ்தானத்தில் இருந்து புதன் ராசிக்கு மாறுகிறார்.
15.09.2025 அன்று தொழில் ஸ்தானத்தில் இருந்து சுக்கிரன் லாப ஸ்தானத்திற்கு மாறுகிறார்.

பலன்:
இந்த மாதம் சின்ன விஷயங்களுக்கு கூட உங்களுக்கு கோபம் வரலாம். கோபத்தை கட்டுப்படுத்துவதன் மூலம் காரியங்கள் சாதகமாக நடைபெறும். எதிர்பாராத பணத் தேவை உண்டாகும். எந்த விஷயத்தையும் சாமர்த்தியமாக சமாளிப்பீர்கள். அடுத்தவர்களால் தொல்லைகள் உண்டாகலாம் கவனம் தேவை. உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு வேலையில் டென்ஷனும் வீண் அலைச்சலும் இருக்கும். வீண் பகை உண்டாகலாம். தொழில், வியாபாரம் தொடர்பான காரியங்களில் தாமதம் ஏற்படலாம்.

பணவரத்து எதிர்பார்த்ததை விட குறையக் கூடும். எதைப் பேசுவதாக இருந்தாலும் பேச்சில் நிதானம் தேவை. பெண்களுக்கு கோபத்தை கட்டுப்படுத்துவதன் மூலம் காரியங்களை சாதகமாக செய்து முடிக்க முடியும். கலைத்துறையினருக்கு சொத்துக்களை அடைவதில் தடைகள் ஏற்படும். அரசியல்வாதிகளுக்கு எதிர்பார்த்த பண வரவு இருக்கும். தேவையான வசதிகள் கிடைப்பதில் ஆர்வம் காட்டுவீர்கள். மாணவர்களுக்கு பாடங்களை படிப்பதில் பின்னடைவு ஏற்படாமல் கவனமாக இருப்பது நல்லது. திடீர் டென்ஷன் ஏற்படலாம். எச்சரிக்கையாக இருப்பது நல்லது.

சித்திரை 3, 4 பாதம்:
இந்த மாதம் யாரையும் நம்பி ஜாமீன் கையெழுத்து போடும் முன் தகுந்த ஆலோசனைகளைப் பெறவும். உறவினர்களிடமும், நண்பர்களிடமும் அன்புடனும் அரவணைப்புடனும் பழகக் கற்றுக் கொள்ளுங்கள். உங்களின் மதிப்பு மரியாதைக்கு எந்த விதமான பங்கமும் வராது.  

சுவாதி:
இந்த மாதம் வாழ்க்கையில் பொன்னான வாய்ப்புகள் தேடி வரும். வாழ்க்கைவளம் முன்னேறும். தெய்வ அனுகூலத்துடனும் காரியங்களை சாதித்துக் கொள்வீர்கள். சகோதர சகோதரிகளிடம் நெருக்கம் அதிகரிக்கும். வேலை செய்யும் இடத்தினில் சிற்சில பிரச்சனைகள் வரலாம்.  

விசாகம் 1, 2, 3ம் பாதம்:
இந்த மாதம் ஓட்டுனர்கள், இயந்திரங்கள் சம்பந்தப்பட்ட தொழிற்சாலைகளில் வேலை செய்வோருக்கு மிக நல்ல காலகட்டமிது. உங்களது திறமையினை நிர்வாகம் சரியாக பயன்படுத்திக் கொள்ளும். உங்கள் பணி நிரந்தமாகும். மேல் அதிகாரிகள் மற்றும் உடன் பணி செய்வோரிடம் வீணான வாக்குவாதத்தில் ஈடுபட வேண்டாம்.  

 
அதிர்ஷ்ட கிழமைகள்: புதன், வியாழன், வெள்ளி
பரிகாரம்: மாரியம்மனை வெள்ளிக்கிழமை அன்று தீபம் ஏற்றி வழிபட சகல நன்மைகளும் உண்டாகும். தடை தாமதம் நீங்கும்.
சந்திராஷ்டம தினங்கள்: ஆகஸ்ட் 17, 18, செப் 13, 14
அதிர்ஷ்ட தினங்கள்: ஆகஸ்ட் 28, 29

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்