ராகு, கேது கிரகங்கள் போல, குளிகை, மாந்தி என்பவற்றையும் முன்னோர் நிழல் கிரகங்களாக வகுத்தனர்.
சூரியன் முதலான கிரகங்கள் ஏழிற்கும் ஏழு நாட்களின் பெயர் சூட்டினார்கள். ராகுவிற்கு தினமும் ராகு காலமாகவும், கேதுவிற்கு எமகண்ட நேரமும் ஒதுக்கப்பட்டது. மாந்திக்கு, தமிழகத்தில் நேரம் ஒதுக்குவது வழக்கில் இல்லை. ஆந்திரா, கேரளம், கர்நாடகம், வடமாநிலங்களில் வழக்கில் உள்ளது.
மாந்தன் என்பவன் சனி, அவனுடைய புதல்வன் மாந்தி, சனிக் கிரகத்தில் இருந்து வெளிவந்தவன் என்று அர்த்தம். அவனுக்குக் குளிகன் என்றும் பெயர் உண்டு! ஜாதக பலன் சொல்லும்போது, மாந்தியையும் அதாவது குளிகனையும் சேர்த்துச் சொல்ல வேண்டும் என ஜாதக நூல்கள் பரிந்துரைக்கின்றன.