புத்திர பாக்கியம் அருளும், தோஷங்கள் நீக்கும் சிறப்பு நாள் எது தெரியுமா?

Mahendran

செவ்வாய், 29 ஜூலை 2025 (18:04 IST)
அமாவாசையை அடுத்து வரும் ஐந்தாம் நாளான பஞ்சமி திதி, கருட பஞ்சமி மற்றும் நாக பஞ்சமியாக கொண்டாடப்படுகிறது. இந்நாளில், மகாவிஷ்ணுவின் வாகனமான கருடாழ்வாரையும், ஆதிசேஷனையும் வழிபடுவது சிறப்பு. கருடன், மகாவிஷ்ணுவின் தலங்களில் 'பெரிய திருவடி' எனப் போற்றப்படுபவர்; இவருக்கு எந்த தவறுக்கு என்ன தண்டனை என்பதை இறைவன் போதித்ததே 'கருட புராணம்' ஆகும்.
 
கருட பஞ்சமியன்று கருடரையும், விஷ்ணுவையும் வழிபடுவது இன்பமான வாழ்க்கையை அமைத்துக் கொடுக்கும். பெண்கள் கவுரி அம்மனை நாகவடிவில் அலங்கரித்து, நோன்பிருந்து, குங்கும அர்ச்சனை செய்து, பால் கொழுக்கட்டை, பால் பாயாசம் படைத்து வழிபடலாம். அம்பிகையின் ஸ்தோத்திரங்கள் பாடி வழிபடுவதால் புத்திர பாக்கியம் உண்டாகும்; குழந்தைகள் தீர்க்க ஆயுளுடன் வாழ்வார்கள்.
 
நாக சதுர்த்தி மற்றும் கருட பஞ்சமி நாட்கள் நாக தோஷத்தை போக்கக்கூடிய சிறப்புமிக்கவை. சர்ப்ப தோஷத்தால் ஏற்படும் துன்பங்களை நீக்கும் வலிமை கருட பகவானுக்கு உண்டு. எனவே, கருட பஞ்சமியன்று அருகிலுள்ள பெருமாள் கோவிலுக்குச் சென்று கருட பகவானையும், பெருமாளையும் வழிபட்டு வர நாக தோஷம் விலகும் என்பது நம்பிக்கை.

Edited by Mahendran
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்