அவர்களின் பிரார்த்தனைக்கு இணங்கி பகவான் கிருஷ்ணன் ஒரு குள்ள பிராமணர் உருவெடுத்து, பிரம்மச்சாரி போல் உடைஅணிந்து பலி மகாராஜா யாகசாலைக்கு சென்றேன் நான் பலி ராஜாவிடம் மூன்றடி நிலத்தை தானமாகக் கேட்டேன். பலி என்னை மூன்றடி நிலத்தை விட அதிகமாக ஏதேனும் கேட்கும்படி வேண்டி னார். இருப்பினும் நான் கேட்ட மூன்றடி நிலத்திலேயே நான் திருப்தி அடையும் நோக்கத்தை வெளிப்படுத்தினார்.
மன்னர் பலி மற்றும் அவர் மனைவி விந்தியாவலி எனக்கு மூன்றடி நிலத்தை தானமளித்தனர். பகவான் வாமன தேவர் தன் உருவத்தை விரிவடைய தொடங்கினார். தன்னுடைய ஒரு அடியில் பாதாளத்திலு ள்ள ஏழு லோகங்களும் அடங்கின பிறகு வாமன தேவர் தன் மூன்றாவது அடியை வைக்க இடத்தை கேட்டபோது பலி மகா ராஜா கைகூப்பி வணங்கி தன சிரத்தை அர்ப்பணித்தார்.