தியாகப்ரம்மத்திற்காக வாழ்க்கையை அர்ப்பணித்தவர் - நாகை சௌந்தர்ராஜன்

மும்மூர்த்திகளுள் ஒருவரான தியாகராஜர் மேல் கொண்ட அதீத பக்தியினால் 58 ஆண்டுகளுக்கு முன், திருவையாறு செல்ல ஆசைப்பட்டு அப்பாவிடம் அனுமதியும் கொஞ்சம் நிதியும் கேட்டு மறுக்கப்பட்டு வீட்டிலேயே ஆராதிக்க தன கையால் தியாகராஜ சுவாமி படம் வரைந்து  கொடுக்க, தன் நண்பர் வீணை சிவா மற்றும் பிவி ராமன் - பிவி லக்ஷ்மணன் இவர்களோடு இணைந்து 1952ம் ஆண்டு ஸ்ரீசத்குரு கான  நிலையம் என்று தொடங்கினார் மிருதங்க வித்வான் நாகை.சௌந்தர்ராஜன். 
கடந்த ஆண்டு வரை தானே இருந்து ஆண்டுதோறும் தவறாமல் தியாகராஜ ஆராதனை உற்சவமும் நடத்தி வந்தார். தியாகராஜரின் மீதும் இசையின் மீதும் அளவில்லா பற்று கொண்ட அவர் சில மாதங்களுக்கு முன் பரமபதம் அடைந்தார்.
65 ஆண்டுகளாக பிரதி ஜனவரி தடையில்லாமல் ஆராதனை உற்சவம் நடத்துவது அந்த தியாகராஜனின் கருணை என்பார். இந்த உற்சவத்தில்  பிரதான ஆராதனை இவரது தந்தை வரைந்து கொடுத்த தியாகராஜர் படத்துக்குத்தான். இவரிடம் கற்றுக்கொண்டு அரங்கேறியவர் பட்டியல்  பெரிது.
இந்த ஆண்டு பிப்ரவரி 09 மற்றும் பிப்ரவரி 10 என இரண்டு நாட்கள் நடக்கிறது. மேற்கு மாம்பலம் ஸ்டேஷன் ரோட்டில் அமைந்திருக்கும்  பாண்டியன் ஹாலில் விமரிசையாக நடக்க இருக்கிறது. நாகை சௌந்தர்ராஜன் இசைக்காக தன் வாழ்க்கையை அர்ப்பணித்துக் கொண்டு  மிகவும் எளிய வாழ்க்கை நடத்தியவர். இவரது பக்தியினால்தான் களக்காடு ராமநாராயணன், எம் எல் வி, மாம்பலம் சகோதரிகள், எம்  சந்திரசேகரன், பாம்பே சிஸ்டர்ஸ், Flute ரமணி, கே வி ராமானுஜம், திருவிடை மருதூர் ராதாகிருஷ்ணன் என்று பெரிய லிஸ்ட்டில்  ஜாம்பவான்கள் இங்கு வந்து சந்தோஷமாக தியாகரஜரை ஆராதித்து விட்டுப் போகிறார்கள்.
 
துளியும் விளம்பரம் விரும்பாத இவருக்கு பாரத் கலாசார், ம்யூசிக் அகாடெமி, கிருஷ்ண கான சபா, சதாசிவ பிரம்மேந்திர சபா, காஞ்சி காம கோடி பீடம் என்று பலரும் விருதுகள் வழங்கி கௌரவித்திருக்கிரார்கள்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்