மாதந்தோறும் ஒருமுறை - வளர்பிறை, தேய்பிறை திரயோதசி (13-ம் நாள்) நாட்கள் பிரதோஷ தினங்கள். பிரதொஷ நாட்களில் அதிகாலை எழுந்து நீராடி, சிவாலயம் சென்று வழிபட வேண்டும். ஆலயங்களில் நடைபெறும் பிரதோஷ பூஜைகளில் கலந்துக்கொள்ளவேண்டும்.
சாதாரண பிரதோஷ வேளைகளில் சிவாலயம் சென்று வழிபட்டால் ஒரு வருடம் ஆலயம் சென்று இறைவழிபாடு செய்த பலனும், சனிப் பிரதோஷத்தன்று அவ்வாறு வழிபடும் போது ஐந்து வருடம் ஆலயம் சென்று வழிபாடு செய்த பலனும் கிடைக்கும் என்பது நம்பிக்கை.