ஒரு வீட்டில் வலம்புரி சங்கு அலங்காரமாக வைக்கப்பட்டிருந்தால், அந்த வீட்டில் குபேரன் அருள் இருக்கும். வீட்டில், பில்லி, சூனியம், ஏவல்கள் நெருங்காது. ஒரு வீட்டில் வலம்புரி சங்கு அலங்காரமாக வைக்கப்பட்டிருந்தால், அந்த வீட்டில் குபேரன் அருள் இருக்கும். மேலும் மகாலட்சுமி அந்த வீட்டில் நிரந்தர வாசம் செய்வாள்.
வலம்புரிச் சங்கில் தீர்த்தம் இட்டு, துளசி இலையைப் போட்டு பூஜித்து பின்னர், அந்த நீரை குளிக்கும் நீரில் கலந்து குளித்தால், பிரம்மஹத்தி தோஷம் நீங்கும் என்பது ஐதீகம்.
வலம்புரி சங்கில் வைத்த தீர்த்தத்தைக் கொண்டு, சுவாமிக்கு அபிஷேகம் செய்தாலும் நமக்கு உள்ள தோஷம் நீங்கிவிடும். சங்கை வீட்டில் வைத்தால் நன்மை மேலும் அதை முறையான பூஜை செய்து வழிபாடு செய்வதன் மூலம் அதிகமான அதிர்ஷ்ட பலன்களை பெற முடியும்.