தட்சிணாமூர்த்தியை வழிபடுவதால் உண்டாகும் அற்புத பலன்கள் !!

வியாழன், 16 ஜூன் 2022 (13:08 IST)
நவகிரகங்களில் பூரண சுப பலம் பெற்றவர் குருபகவான். தேவர்களுக்கு குருவான இவரை பிரகஸ்பதி என்றும், வியாழ பகவான் என்றும் அழைப்பர்.


சிவ வழிபாடு நீங்கலாக, கிரக நிலைகளால் ஏற்படும் தீய விளைவுகளில் இருந்து விடுபட வேண்டி குரு பகவானை (வியாழன்) வழிபாடு செய்வதும் அவசியம். ஜாதகத்தில் குரு தோஷம் இருப்பவர்கள், குருபகவானுக்கு உரிய பரிகாரங்களைச் செய்து வழிபட்டால், வாழ்வில் சுபிட்சம் உண்டாகும்.

ஶ்ரீதட்சிணாமூர்த்திக்கு நெய் தீபம் ஏற்றி வழிபட்டால், சகல தோஷங்களும் நீங்கி சந்தோஷம் பெருகும். தட்சிணாமூர்த்தியை வழிபட்டால், காரியத் தடைகள் நீங்கி, நினைத்த காரியங்கள் எல்லாம் கைகூடும்.

தட்சிணாமூர்த்தி கல்லாலின் கீழ் அமர்ந்து நான்மறைகளோடு ஆறு அங்கங்களையும் சனகர், சனந்தனர், சனாதனர், சனற்குமாரர் என்ற நான்கு பிரம்மரிஷிகளுக்கு போதிப்பவர்.

குரு பகவான் நவகோள்களில் குரு என்ற வியாழனாக இருந்து உயிர்களுக்கு அவை முன்ஜென்மங்களில் செய்த நல்வினை தீவினைகளுக்கான பலாபலன்களை இடமறிந்து காலமறிந்து கொண்டு சேர்ப்பவர்.

தட்சிணாமூர்த்தி 64 சிவவடிவங்களில் ஒருவர், குரு ஒன்பது கோள் தேவதைகளில் 5 ஆம் இடத்தில் அங்கம் வகிப்பவர். சிவன் தோன்றுதல் மறைதல் என்ற தன்மைகள் இல்லாதவர். குருவோ உதயம்-அஸ்தமனம் என்ற தன்மைகள் உடையவர்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்