ஆனி மாதம் விரதம் இருந்தால் ஆயிரம் பலன்கள் பெறலாம்..!

திங்கள், 19 ஜூன் 2023 (18:38 IST)
ஆனி மாதத்தில் விரதம் இருந்தால் ஆயிரம் பலன்கள் பெறலாம் என நம் முன்னோர்கள் தெரிவித்துள்ளனர். 
 
தமிழ் மாதங்களில் முக்கிய மாதங்களில் ஒன்றான ஆனி மாதம் சமீபத்தில் பிறந்துள்ள நிலையில் இந்த மாதத்தில் பலவித விரதங்களை மேற்கொண்டால் சிறப்புகள் உண்டாகும் என்று கூறப்படுகிறது. 
 
தேவர்களின் மாலை பொழுது என்று ஆனி மாதத்தை புராணங்கள் குறிப்பிடுகின்றன. இந்த மாதத்தில் ஆனி திருமஞ்சனம் தினத்தன்று விரதம் இருந்தால் நாம் நினைத்த எண்ணங்கள் ஈடேறும் என்பது ஐதீகமாக உள்ளது.
 
 அதேபோல் ஆனி மாதம் பௌர்ணமி தினத்தன்று விரதம் இருப்பவர்களுக்கு ஏராளமான நன்மைகள் கிடைக்கும் என்றும் கூறப்படுகிறது. ஆனி மாதத்தில் திருச்சி மலைக்கோட்டை தாயுமானவர் கோயிலில் விரதம் இருந்தால் குடும்பம் வாழையடி வாழையாக சிறப்பாக இருக்கும் என்று முன்னோர்கள் தெரிவித்துள்ளனர்.
 
Edited by Mahendran

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்