ஜூலை மாத ராசிபலன்கள், செய்ய வேண்டிய பரிகாரங்கள்! – மீனம்!

Prasanth K

செவ்வாய், 1 ஜூலை 2025 (08:46 IST)
கிரகநிலை:
தைரிய வீரிய ஸ்தானத்தில் சுக்கிரன் - சுக ஸ்தானத்தில் சூர்யன், குரு - பஞ்சம ஸ்தானத்தில் புதன் - ரண ருண ரோக ஸ்தானத்தில் செவ், கேது - அயன சயன போக ஸ்தானத்தில் சனி, ராகு என கிரகங்கள் வலம் வருகிறார்கள்.

கிரகமாற்றம்:
02.07.2025 அன்று  அயன சயன போக  ஸ்தானத்தில்  சனி வக்ரம் ஆரம்பிக்கிறார்.   
03.07.2025 அன்று  பஞசம  ஸ்தானத்தில்  புதன் வக்ரம் ஆரம்பிக்கிறார்.
17.07.2025  அன்று  சுக ஸ்தானத்தில்  இருந்து  சூரியன்   பஞசம  ஸ்தானத்திற்கு  மாறுகிறார்.
17.07.2025 அன்று புதன் பகவான் பஞ்சம  ஸ்தானத்தில்  இருந்து சுக ஸ்தானத்திற்கு மாறுகிறார்.
26.07.2025  அன்று  தைரிய வீரிய  ஸ்தானத்தில்  இருந்து  சுக்கிரன்   சுக ஸ்தானத்திற்கு  மாறுகிறார்.
29.07.2025  அன்று  ரண ருண ரோக ஸ்தானத்தில்  இருந்து  செவ்வாய்   களத்திர  ஸ்தானத்திற்கு  மாறுகிறார்.

பலன்:
எச்சரிக்கையுடன் எதிலும் ஈடுபடும் மீன ராசியினரே, நீங்கள் அவசரமாக எதையும் செய்யும் தயங்காத குணமும் உடையர்கள். இந்த மாதம்   உடல் சோர்வு உண்டாகலாம்.  வீண் கவலை, வீண் வாக்குவாதங்கள் ஆகியவை ஏற்படும். முயற்சிகளில் வெற்றி உண்டாகும். நீண்ட நாட்களாக இழுப்பறியாக இருந்து வந்த பிரச்சனைகள் தீரும்.

குடும்பத்தில் இருந்து பிரிந்து சென்ற நபர் மீண்டும் வந்து போவார்கள். அதனால் மகிழ்ச்சி உண்டாகும். வாழ்க்கை துணைக்காக செலவு செய்ய நேரிடும். கோபத்தை குறைத்து இனிமை யாக பேசுவதன் மூலம் குடும்பத்தில் அமைதி உண்டாகும். வெளியூர் பயணம் செல்ல வேண்டி இருக்கலாம்.

தொழில் வியாபாரம் தொடர்பான காரி யங்களில் இழுபறியான நிலை காணப் படும். வீண் அலைச்சல் எதிர்பாராத செலவும் உண்டாகும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் முன்னேற்றம் காண்பார் கள். நிலுவையில் உள்ள தொகை வந்து சேரும். சிலருக்கு வேலை மாற்றம் உண்டாகும்.

கலைத்துறையினர் சூட்டிங் ஸ்பாட்டில் நடிக்கும் போது சக கலைஞர்களுடன் மோதல் போக்கு ஏற்பட உள்ளது. அத்தருணத்தில் கோபத்தை கட்டுப் படுத்தி கொள்ளுங்கள் மற்றபடி  வாய்ப்புகள் கிடைப்பதில் பிரச்சினைகள் இருக்காது.

அரசியல் துறையினருக்கு கட்சியில் சிறுசிறு பிரச்சனைகள் ஏற்படக்கூடும் மேலிடத்தின் ஆதரவு தங்களுக்கு இருப்பதால் பாதிப்பு எதுவும் ஏற்படாது. தொண்டர்களை அனுசரித்து நடந்து  கொள்ளுங்கள்.

பெண்களுக்கு அடுத்தவர் பேசுவதை காதில் வாங்காமல் தவிர்ப்பது நல்லது. நீண்ட நாட்களாக இழுபறியாக இருந்த பிரச்சனைகள் குறையும். மனதில் எதிர்காலம் பற்றிய சிந்தனை உண்டாகும்.

மாணவர்களுக்கு கல்வியில் முன்னேற்றம் காண்பதில் ஆர்வம் உண்டாகும். மனதில் உற்சாகம் ஏற்படும்.

பூரட்டாதி 4-ம் பாதம்:
இந்த மாதம் தொழிலில் சிக்கல்கள் உருவாகாது என்றாலும் சிற்சில வாக்குவாதங்கள் இருக்கும். எதிலும் அளவோடு ஈடுபட்டு வந்தால் தொல்லைகள் இராது. அடுத்தவர்களுடைய விவகாரங்களில் வீணாக தலையிட வேண்டாம். பகைவர்கள் பணிந்து போகவும் வாய்ப்புகள் உண்டு. உத்தியோகத்தில் இருப்பவர்கள் பணிசுமை குறைந்து காணப்படுவார்கள். வேலை திறமைக்கு பாராட்டு கிடைக்கும்.

உத்திரட்டாதி:
இந்த மாதம் விடாப்பிடியாக செயல்பட்டு சில வேலைகளை முடிப்பீர்கள். உறவினர், நண்பர்களுடன் மனத்தாங்கல் வரும்.யாருக்கும் சாட்சி கையெழுத்திட வேண்டாம். வியாபாரத்தில் வேலையாட்களால் பிரச்னைகள் வரக்கூடும். உத்யோகத்தில் மறைமுக எதிர்ப்புகள் வந்து நீங்கும். இதுவரை இருந்து வந்த நோய் நீங்கும். அவர்களது நலனில் அக்கறை காட்டுவீர்கள். கணவன் மனைவிக்கிடையே கருத்து வேற்றுமை ஏற்படலாம்.

 
ரேவதி:
இந்த மாதம் பொதுவாக அன்றாடப் பணிகளை கவனித்துக் கொண்டு மிகவும் நிதானமாக இருக்க வேண்டும். பெரியோர் சொல்படி நடந்து கொண்டால் தொல்லைகளைத் தவிர்க்கலாம். பலவிதமான சூழ்நிலைகளில் உங்களுடைய சாதுர்யத்தால் சமாளிப்பீர்கள். பிள்ளைகளிடம் கவனமாக எதையும் எடுத்து சொல்வது நல்லது. பூர்வீக சொத்துக்களில் இருந்த பிரச்சனை தீரும். பெண்களது காரியங்களுக்கு இருந்த எதிர்ப்புகள் விலகும். பணவரத்து திருப்தி தரும். மனகுழப்பம் நீங்கும்.

பரிகாரம்: சித்தர் கோவில்களுக்குச் சென்று வர மனக்குறைகள் அகலும்.
அதிர்ஷ்ட கிழமைகள்: புதன், வியாழன்
சந்திராஷ்டம தினங்கள்: ஜூலை 04, 05, 06
அதிர்ஷ்ட தினங்கள்: ஜூலை 20, 21

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்