39 அடி கால பைரவர் சிலை அமைந்துள்ள கோவில்.. எங்கு இருக்கிறது தெரியும?
திங்கள், 30 அக்டோபர் 2023 (17:59 IST)
பொதுவாக சிவன் கோவிலில் காலபைரவர் சிலை சிறிதாக தெற்கு நோக்கி அமைந்திருக்கும். ஆனால் ஈரோடு மாவட்டம் காங்கேயம் மெயின் ரோடு அவள் பூந்துறை ராட்டைசுற்றிபாளையத்தில் அமைந்துள்ள காலபைரவர் சிலை 39 அடி உயரத்தில் பிரமாண்டமாக நிறுவப்பட்டுள்ளது.
உலகின் மிகவும் பிரமாண்டமான 39 அடி உயரமுள்ள காலபைரவர் சிலையை பார்ப்பதற்காக தினந்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகை தருகின்றனர். சிவனின் அவதாரமாக பைரவர் இருக்கிறார் என்ற நம்பிக்கை உள்ள நிலையில் இந்த சிலை பிரமாண்டமாக அமைக்கப்பட்டுள்ளது.
மேலும் காலபைரவரின் வாகனம் நாய் என்பதால் காலபைரவர் சிலையின் பின் பக்கத்தில் பிரமாண்டமான நாய் உருவம் உள்ளது. இந்த கோவிலின் இன்னொரு சிறப்பு அம்சம் என்னவெனில் இங்கே 650 கிலோ எடையுள்ள சொர்ண ஆகர்ஷண பைரவர் சிலை ஒன்றும் உள்ளது.
முழுக்க முழுக்க ஐம்பொன்னால் ஆன இந்த சிலையை வணங்கினால் ஏராளமான பலன்கள் மற்றும் வளங்கள் கிடைக்கும் என்பது ஐதீகமாக உள்ளது.