முகச்சுருக்கம் நீங்கி இளமையான தோற்றம் பெற உதவும் குறிப்புகள் !!

குளிர்காலம் நம் சருமம் மற்றும் கூந்தலின் ஆரோக்கியத்தை கெடுக்கும் வகையில் இருக்கும். முகம், கை கால்கள், ஸ்கால்ப் ஆகியவற்றில் இருக்கக்கூடிய சருமத்தை வறண்டு போக செய்யும். 


சரியான முறையில் பராமரிக்காவிட்டால் கடுமையான விளைவுகளை ஏற்படுத்திவிடும். க்ரீம்களை பயன்படுத்தாமல், இயற்கையாக கிடைக்கும் பழங்களை வைத்து உங்கள் சருமத்தை பராமரிக்கலாம்.
 
பனிக்காலத்தில் சருமத்தின் ஆரோக்கியத்தை பராமரிக்க அவகாடோ சிறந்தது. இதில் இருக்க கூடிய எசன்ஷியல் ஆயில் சருமத்தில் ஈரப்பதத்தை தக்க வைக்க  உதவும். நன்கு பழுத்த அவகாடோவை அரைத்து முகம் மற்றும் கூந்தலுக்கு தடவலாம். 
 
அவகாடோவில் ஆண்டிஆக்ஸிடண்ட், ஆண்டி-இன்ஃப்ளமேட்ரி மற்றும் ஆரோக்கிய கொழுப்புகள் இருப்பதால் இளமை தோற்றத்தை அள்ளித்தரும். மேலும்  அவகாடோவில் வைட்டமின் ஈ நிறைந்திருப்பதால் சருமத்தை பளபளப்பாக வைத்திருக்கும்.
 
முகத்தில் உள்ள சுருக்கங்கள் நீங்க, அவகாடோ பழத்தைத் தோல் நீக்கி, மிக்ஸியில் அடித்துக்கொள்ளுங்கள். முகத்தை நன்கு கழுவிய பிறகு அந்த அவகாடோ பேஸ்ட்டை முகம் முழுக்க பரவலாகப் பூசுங்கள். 15 நிமிடங்கள் கழித்து கழுவிவிடுங்கள். இரண்டு நாள்களுக்கு ஒருமுறை இதைச் செய்துவந்தால், முகச்சுருக்கம் நீங்கி இளமையான தோற்றம் பெறலாம்.
 
முகத்தில் சுருக்கம், முதிர்ச்சி ஆகியவற்றை தடுக்க அவகாடோ பெரிதும் உதவுகிறது. நன்கு பழுத்த அவகாடோவை எடுத்து அரைத்து கொள்ளுங்கள். அத்துடன் ஒரு  மேஜைக்கரண்டி தேன் மற்றும் பால் சேர்த்து நன்கு கலந்து கொள்ளவும். இந்த கலவையை முகம், கழுத்து மற்றும் கைகளில் தடவி வரலாம். 15 முதல் 20  நிமிடங்கள் வரை வைத்திருந்து பின் கழுவினால் நல்ல பலன் கிடைக்கும்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்