இயற்கையான முறையில் சருமத்துளைகளை சரிசெய்யும் வழிமுறைகள் !!
சருமத்தில் உள்ள துளைகள் உங்களது முகத்தை அசிங்கமாக வெளிப்படுத்தும். இதனை இந்த சருமத்துளைகளை மிக எளிமையான வீட்டு வைத்தியங்களை பயன்படுத்தி தீர்க்கலாம்.
ஒரு பாத்திரத்தில் நீர் விட்டு கொதிக்க வைத்து உங்கள் கழுத்திலிருந்து தலை வரை ஒரு கனமான போர்வையால் மூடி பாத்திரத்தில் வெளிவரும் ஆவியில் முகத்தை காட்டவேண்டும். முகத்தில் அதிக நீர் வெளியேறும். இவை எல்லாமே சருமத்தில் இருக்கும் அழுக்குகளே.
எலுமிச்சை சாறு ஒரு பங்கு சேர்த்து அதனில் மூன்று பங்கு வெள்ளரிக்காய் சாறு சேர்த்து நன்றாக கலந்து அதன் சாறில் பஞ்சு உருண்டையை நனைக்கவும் இதை முகம் முழுக்க தடவி 20 நிமிடங்கள் கழித்து, முகத்தை குளிர்ந்த நீரில் கழுவி எடுக்கவும்.
வாழைப்பழத்தோலை எடுத்து சருமத்தில் வட்ட இயக்கத்தில் தேய்க்க வேண்டும். பதினைந்து நிமிடங்கள் கழித்து முகத்தை குளிர்ந்த நீரில் கழுவி எடுக்கவும். வாரத்துக்கு இரண்டு முறை இதை செய்தால் முகத்தில் திறந்திருக்கும் துளைகள் பெருமளவு சுருங்கிவிடும்.
ஐஸ்கட்டியை எடுத்து சுத்தமான துணியில் சுற்றி முகத்தில் நன்றாக 15 முதல் 30 நிமிடங்கள் வரை ஒத்தடம் கொடுக்கவும். தினமும் இரண்டு முறை செய்து வந்தால் நல்ல பலன் தெரியும்.