சருமத்தில் ஏற்படும் பிரச்சனைகளை தடுக்க செய்யவேண்டியவை....!!

அனைவருக்கும் சருமம் நன்கு வெள்ளையாக வேண்டுமென்ற ஆசை இருக்கும். அழகுப் பொருட்களை முயற்சி செய்து பார்த்திருப்போம் அதிலும் ஃபேஸ் பேக் அல்லது ஸ்கரப் என்று பல வழிகளை மேற்கொண்டிருப்போம். குறிப்பாக உண்ணும் உணவு முறையில் நல்ல ஆரோக்கியத்தை பின்பற்ற  வேண்டும்.
சருமத்தை பிரச்சனைகளை தடுக்கும் 5 உணவுகள்:
 
கேரட்: கேரட்டில் வைட்டமின் சி மற்றும் கரோடீன் போன்ற சத்துக்கள் அதிகம் உள்ளது. அதுமட்டுமின்றி, இவை சருமத்திற்கும், கூந்தலுக்கும் மிகவும் சிறந்தது. எனவே கேரட் ஜூஸை தினமும் ஒரு டம்ளர் குடித்து வந்தால், சருமம் நன்கு பொலிவு பெறும்.
 
பப்பாளி: பப்பாளியில் வைட்டமின் சி இருப்பதோடு, வைட்டமின் ஏ, ஈ மற்றும் சருமத்தில் இருக்கும் அழுக்குகளை நீக்கும் ஆன்டி-  ஆக்ஸிடன்ட்களும் நிறைந்துள்ளது. எனவே இந்த பழத்தை ஃபேஸ் பேக் அல்லது ஸ்கரப் போன்றவற்றை செய்யலாம். அதுமட்டுமின்றி  இவற்றை சாப்பிட்டால் முறையற்ற மாதவிடாய் சுழற்சியும் சரியாகிவிடும் 
 
சோயா பொருட்கள்: சோயா பொருட்கள் ஜிங்க் மற்றும் வைட்டமின் சி சத்து அதிகம் உள்ளது. இதனை அதிகம் சாப்பிட்டால், பொலிவிழந்த  சருமமும் பொலிவு பெறும். மேலும் சருமத்தில் ஏற்படும் பிரச்சனைகளை தடுக்கும். உதாரணமாக சோயா பால் முகப்பருவை சரிசெய்யும்.
ப்ராக்கோலி: இந்த சக்தி வாய்ந்த காய்கறியில் சருமத்தை வெள்ளையாக்கும் வைட்டமின் சி மற்றும் ஈ போன்றவை இருப்பதால் அவை  உடலில் உள்ள அழுக்குகளை நீக்கி சருமத்தை பொலிவாக்குகிறது 
 
பச்சை இலைக் காய்கறிகள்: பச்சை இலைக் காய்கறிகள் சருமத்திற்கு மட்டுமின்றி உடல் முழுவதற்கும் சிறந்தது. ஏனெனில் இதில் வைட்டமின்கள் ஊட்டசத்துக்கள் மற்றும் கனிமச்சத்துக்கள் நிறைந்துள்ளன. அதில் பசலைக் கீரை போன்றவை மிகவும் ஆரோக்கியமானவை.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்