தேனை எதனுடன் சேர்த்து சாப்பிடுவதால் பலன் கிடைக்கும்...?

தேன் இயற்கை அளித்த வரம். அனைவரின் வீடுகளிலும் இருக்கவேண்டிய உணவு. இதில் சத்துகளும் வைட்டமின்களும் தேனில் உண்டு.
 
தேனை சேரட் சாறுடன் கலந்து காலை ஆகாரத்திற்கு ஒரு மணி நேரத்திற்கு முன் பருகினால் கண் பார்வை விருத்தியடையும்.
 
தேங்காய்பாலில் தேன் கலந்து சாப்பிட்டால் குடல் புண், வாய்ப்புண்கள் ஆறும்.
 
தேனுடன் இஞ்சி சாறு கலந்து அருந்தினால் இருமல், தொண்டை வலி, மார்பு சளி, மூக்கு ஒழுகுதல் மற்றும் மூக்கடைப்பு போன்ற  உபாதைகளில் இருந்து நிவாரணம் கிடைக்கும்.
 
நெல்லிக்காய் சாறுடன் தேன் கலந்து சாப்பிட்டால் இன்சுலின் சுரக்கும்.
 
ஒரு தேக்கரண்டி அளவு பூண்டு சாறுடன் இரண்டு டீ கரண்டி தேன் சேர்த்து தினமும் ஒரு வேளை சாப்பிடுவது இரத்த கொதிப்புக்கு சிறந்த  மருந்தாகும்.
மாதுளம் பழச்சாறுடன் தேன் கலந்து சாப்பிட்டால் புது ரத்தம் உண்டாகும்.
 
ஒரு டம்ளர் மிதமான சூடுள்ள நீரில் ஒன்று அல்லது இரண்டு தேக்கரண்டி தேனும், ஒரு தேக்கரண்டி எலுமிச்சை சாறும் கலந்து தினமும்  காலைக்கடன்களுக்கு முன் பருகவும். இது இரத்த சுத்திகரிப்பிற்கும், உடல் கொழுப்பை குறைப்பதற்கும் மற்றும் வயிற்றை சுத்தமாக்கவும்  உதவும்.
 
ஆரஞ்சுப்பழத்துடன் தேன் கலந்து சாப்பிட்டால் நல்ல தூக்கம் வரும்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்