சருமத்தின் நிறத்தை அதிகரிக்க உதவும் நேச்சுரல் டிப்ஸ் !!

சருமத்தின் நிறத்தை அதிகரிக்க வாழைப்பழம் மிகவும் உதவியாக இருக்கும். அதுவும் வாழைப்பழம் ப்ரீ-ராடிக்கல்களிடமிருந்து நல்ல பாதுகாப்பு வழங்கி, முதுமையைத் தடுக்கும்.


அதற்கு வாழைப்பழத்தை மசித்து முகத்தில் தடவி 15-20 நிமிடம் ஊற வைத்து, குளிர்ந்த நீரில் கழுவ வேண்டும். 
 
ஆரஞ்சு ஜூஸ் சருமத்தின் நிறத்தை மேம்படுத்தவும் உதவும். அதற்கு ஆரஞ்சு ஜூஸ் 4 டேபிள் ஸ்பூன் எடுத்துக் கொண்டு, அத்துடன் 2 டேபிள் ஸ்பூன் முல்தானி மெட்டி சேர்த்து கலந்து, முகத்தில் தடவி 15-20 நிமிடம் ஊற வைத்து கழுவ வேண்டும்.
 
1 டேபிள் ஸ்பூன் வெள்ளரிக்காய் சாற்றில் 2 டீஸ்பூன் தேன் கலந்து, முகத்தில் தடவி 20 நிமிடம் ஊற வைத்து கழுவலாம் அல்லது வெள்ளரிக்காய் ஜூஸ், எலுமிச்சை ஜூஸ் மற்றும் ரோஸ் வாட்டரை ஒன்றாக கலந்து, முகத்தல் தடவி 15 நிமிடம் ஊற வைத்து கழுவவும் செய்யலாம். இவற்றின் மூலமும் சருமத்தின் நிறத்தை அதிகரிக்கலாம்.
 
தயிரை தினமும் முகத்தில் தடவி வருவதன் மூலமும் சருமத்தில் உள்ள இறந்த செல்களை முழுமையாக நீக்கி சரும நிறத்தை மேம்படுத்தலாம். மேலும் தயிரில் லாக்டிக் ஆசிட் நிறைந்துள்ளதால், அவை சருமத்தின் பொலிவை அதிகரிப்பதோடு, மென்மையையும் மேம்படுத்தும்.
 
உருளைக்கிழங்கை அரைத்து அதில் சிறிது எலுமிச்சை சாறு சேர்த்து கலந்து, முகத்தில் தடவி 20 நிமிடம் ஊற வைத்து, வெதுவெதுப்பான நீரில் கழுவ வேண்டும். இப்படி தொடர்ந்து செய்து வந்தால், சருமத்தில் உள்ள தழும்புகள், கரும்புள்ளிகள், முகப்பருக்கள், இறந்த செல்கள் போன்றவை நீங்கி, முகத்தின் பொலிவு மற்றும் நிறம் மேம்படும்.
 
2 டேபிள் ஸ்பூன் தக்காளி ஜூஸில், 3 டீஸ்பூன் மோர் சேர்த்து கலந்து, முகத்தில் தடவி 30 நிமிடம் உலர வைத்து, பின் குளிர்ந்த நீரில் கழுவி, உலர வைக்க வேண்டும். இந்த செயல்முறையின் மூலமும் சருமத்தை வெள்ளையாக மாற்றலாம்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்