தேவையான மூலிகைகள்:
தேங்காய் எண்ணெய் - 1 லிட்டர், மருதாணி - 10 கிராம், செம்பருத்தி - 10 கிராம், கறிவேப்பிலை - 10 கிராம், ஆவாரம் பூ - 10 கிராம், கரிசலாங்கண்ணி - 10 கிராம், வெட்டிவேர் - 5 கிராம், சோற்றுக் கற்றாழை - 50 கிராம்.
செய்முறை:
மருதாணி, செம்பருத்தி, கறிவேப்பிலை, ஆவாரம் பூ, கரிசலாங்கண்ணி, சோற்றுக் கற்றாழை இவற்றை ஒன்றாக அரைத்துக் கொள்ளவும். பிறகு கடாயில் 1 லிட்டர் சுத்தமான தேங்காய் எண்ணெய் ஊற்றி, எண்ணெய் சிறிது சூடேறியதும் அரைத்து வைத்த மூலிகைகளை போட்டு மிதமான தீயில் கொதிக்க வைக்கவும். பிறகு வெட்டிவேர் சேர்த்து எண்ணெய் பொன்னிறமாக மாறும்வரை கொதிக்க வைத்து இறக்கி ஆறவைத்து பிறகு வடிகட்டி 2 நட்களுக்கு பிறகு பயன்படுத்தவும்.