ஆரஞ்சு பழத்தை பயன்படுத்தி ஆரஞ்சு பேஷியல் செய்வது எப்படி...?

ஆரஞ்சு ஜூஸை ஃபரீஸரில் வைத்து ஐஸ் கட்டியாக்குங்கள். இதை வெள்ளைத் துணியில் கட்டி, கண்ணுக்குமேல் ஒத்தி எடுங்கள். ஒரு நாள் விட்டு ஒரு நாள் இப்படி செய்து வர, கண்கள் "ப்ளிச்" ஆகிவிடும். தூக்கமின்மையால் கண்களில் ஏற்படும் சோர்வை நீக்கி பிரகாசமாக்கவும் ஆரஞ்சு பயன்படுகிறது.

1 வேப்பங்கொழுந்துடன், ஆரஞ்சு தோல் விழுது - கால் டீஸ்பூன், கஸ்தூரி மஞ்சள் கால் டீஸ்பூன் கலந்து, எங்கெல்லாம் கருமை படர்ந்து இருக்கிறதோ, அங்கெல்லாம் பூசி 5 நிமிடம் கழித்து கழுவுங்கள். வாரம் இருமுறை செய்யுங்கள் கருமை ஓடிவிடும்.
 
ஆரஞ்சு தோலை அரைத்து விழுதாக்கி கொள்ள வேண்டும். இந்த அரைத்தவிழுது - 1/4 ஸ்பூன், கசகசா விழுது - 1 ஸ்பூன், சந்தன பவுடர் - 1 ஸ்பூன் இவற்றை  எல்லாம் சேர்த்து கலந்து ஒரு கெட்டியான விழுதாக்கி கொள்ளுங்கள். இதனை தினமும் தூங்கப் போகு முன் பருக்கள் வந்த இடத்தில் மூடுவது போல் பூசி கொள்ள வேண்டும். பின் காய்ந்ததும் முகத்தை கழுவி விடுங்கள். இதனை செய்தால் வடு மறைவதுடன், மேலும் பருக்கள் வருவதும் நின்று விடும்.
 
ஆரஞ்சு தோலை துண்டுகளாக்கி பவுடராக்கிக் கொள்ளுங்கள். இந்தப் பவுடர், முல்தானிமட்டி, சந்தனம் மூன்றும் சம அளவு எடுத்து அதனுடன் ஆரஞ்சு சாறு  கலந்து,முகம் மற்றும் கழுத்தில் அப்ளை பண்ணி 15 நிமிடம் கழித்து நன்கு கழுவ வேண்டும். வாரத்திற்கு ஒரு முறை இதை முகத்துக்கு போட்டு வர பியூட்டிபார்லர் போகாமல் பேஷியல் செய்தது போல் முகம்பிரகாசமாக ஜொலிக்கும்.
 
ஆரஞ்சு தோல் அரைத்த விழுது கால் ஸ்பூன், கசகசா விழுது ஒரு ஸ்பூன், சந்தனத்தூள் கால் ஸ்பூன் அனைத்தையும் சேர்த்து கெட்டியான விழுதாக்கிக் கொள்ள  வேண்டும்.
 
தினமும் இரவு தூங்கப் போகும்போது, பருக்கள் வந்த இடத்தில் அப்ளை பண்ணி காய்ந்ததும் முகத்தை நன்கு கழுவ வேண்டும். இந்த சிகிச்சையால் வடு மறைவதுடன், பருக்களும் இருந்த இடம் தெரியாமல் காணாமல் போய்விடும்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்